கனடாவுக்கு அனுப்புவதாக இளம்பெண்ணிடம் பணம் பெற்ற நபர்: உண்மை தெரியவந்ததால் அதிர்ச்சி
*கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி பணம் பெற்றிருக்கிறார் ஒருவர்.
*பணம் பெற்றவர் பெங்களூருவைச் சேர்ந்த மோசடியாளர் என தெரியவந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கனடாவுக்கு அனுப்புவதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவலைத் தொடர்ந்து, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், அந்த விளம்பரத்தை வெளியிட்டவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார்.
அப்போது மறுமுனையில் பேசியவர், தான் கனடா நிறுவனம் ஒன்றால் பணிக்கமர்த்தப்பட்டுள்ள வேலைவாய்ப்பு வழங்கும் அதிகாரி என தன்னை அறிமுகம் செய்துகொண்டுள்ளார்.
கனடா அனுப்புவதற்கான மற்றும் விசாவுக்கான கட்டணம் 3.5 இலட்ச ரூபாய் (இலங்கை மதிப்பில் 15,82,892 ரூபாய்) என அவர் கூறியதை நம்பி பணம் அனுப்பியுள்ளார் அந்த கேரள இளம்பெண்.
Photo : iStock
ஆனல், அவர் ஒரு மோசடியாளர் என பின்னர் தெரியவரவே சைபர் குற்றவியல் பிரிவு பொலிசாரிடம் புகாரளித்துள்ளார் அவர். பொலிசார் அந்த நபர் சிம் கார்டு வாங்க பயன்படுத்திய அடையாளங்களை வைத்து அவரைப் பிடிக்க முயலும்போது, அந்த நபர் கொடுத்த அடையாள ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து அட்வான்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொலிசார் மேற்கொண்ட முயற்சியில், அந்த நபர் பெங்களூருவிலுள்ள இந்திரா நகரைச் சேர்ந்த டேவிட் ராஜ் (35) என்பது தெரியவந்தது.
டேவிடைக் கைது செய்துள்ள பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பின் காவலில் அடைத்துள்ளனர்.