பிரான்சுக்கு கொடுத்த பணத்தை திரும்பப் பெறவேண்டும்: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்
சட்ட விரோத புலம்பெயர்ந்தோரைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்சுக்கு கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறவேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்துறைச் செயலரை வலியுறுத்தியுள்ளார்.
பிரான்சுக்கு மிகப்பெரிய தொகையை தருவதாக உறுதியளித்துள்ள பிரித்தானியா
பிரான்சிலிருந்து ஆபத்தான முறையில் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்ட விரோத புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக, 2021ஆம் ஆண்டு, பிரித்தானியா, பிரான்சுக்கு 54 மில்லியன் பவுண்டுகள் கொடுத்தது.
அதற்குப் பின் பிரதமரான ரிஷி சுனக்கோ, சட்ட விரோத புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக பிரான்சுக்கு 480 மில்லியன் பவுண்டுகள் கொடுக்க சம்மதம் தெரிவித்தார்.
அவ்வளவு பெரிய தொகையைக் கொடுப்பதாக வாக்களித்தும், பிரான்ஸ் தரப்பு பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்ட விரோத புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதில் தவறியுள்ளது.
முந்தைய ஆண்டு 45. 8 சதவிகித புலம்பெயர்வோரைத் தடுத்த பிரான்ஸ், இந்த ஆண்டோ, 45. 2 சதவிகித புலம்பெயர்வோரையே தடுத்து நிறுத்தியுள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்
இந்நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Jonathan Gullis, ஆங்கிலக்கால்வாயை சட்ட விரோத புலம்பெயர்வோர் கடக்கும் சூழலில் முன்னேற்றம் ஏற்படவில்லையென்றால், புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்சுக்குக் கொடுத்த பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை திருப்பிக் கொடுக்குமாறு பிரித்தானிய அரசு பிரான்சிடம் கேட்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், பிரான்ஸ் பகுதி ஆங்கிலக்கால்வாயில் பிடிபடும் சட்ட விரோத புலம்பெயர்வோரை, நாமே பிரான்சில் கொண்டுவிட்டுவிடவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உள்துறைச் செயலர் சுவெல்லாவும், புலம்பெயர்தல் துறை அமைச்சர் Robert Jenrickம் இணைந்து பிரித்தானிய மக்களுக்காக குரல் கொடுக்கவேண்டும் என்றும், நீங்கள் செய்வது போதுமானதல்ல என பிரான்சிடம் அவர்கள் தெரிவிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார் Jonathan Gullis.
அவரது கருத்தை பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |