மாதம் ரூ.3000 முதலீட்டில் கோடீஸ்வரர் ஆவது எப்படி? பொருளாதார வல்லுநரின் அறிவுரை
கோடீஸ்வரர் ஆவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று பொருளாதார வல்லுநர் ஒருவர் விளக்கியுள்ளார்.
பொதுவாகவே எல்லோருக்கும் நன்றாக பணம் சம்பாதிக்க வேண்டும் தான் எண்ணமாக இருக்கும். தற்போதைய காலத்தில் பணத்தை சம்பாதிப்பதை விட எப்படி முதலீடு செய்கிறோம் என்பது தான் முக்கியமானதாக உள்ளது.
நீண்ட கால முதலீடு ஏன் நல்லது மற்றும் அதன் தேவை என்பதை பொருளாதார வல்லுநர் கே.ரஜேஷ் விளக்கியுள்ளார்.
நீண்ட கால முதலீடு
இதுதொடர்பாக பொருளாதார வல்லுநர் கே. ரஜேஷ் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் 5 விடயங்களை கூறியுள்ளார்.
* நம்பிக்கை
* சேமித்த சிறிது பணம்
* Discipline - நான் முதலீடு செய்வதை நிறுத்த மாட்டேன்.
* Patience - நான் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்கிறேன். அந்த முதலீடு வளரும்வரை பொறுமையுடன் காத்திருப்பேன்.
* Consistency - நீண்ட காலத்திற்கு மாதம் தவறாமல் முதலீடு செய்வேன்.
நீண்ட கால முதலீடுகளில், சந்தையானது உங்களை எப்போதும் கைவிடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ரூ.3000 முதலீடு
உதாரணமாக ஆண்டுக்கு 12% ரிட்டர்ன் (Assumed Return) வருகிறது என வைத்துக்கொள்வோம். இதில் நீங்கள் ஒரு கோடி ரூபாயை சேமிப்பது தான் இலக்கு என்று நிர்ணயித்துக் கொள்வோம்.
அப்படி பார்க்கையில், நீங்கள் ஒரு கோடி ரூபாயை சேமிக்க 10 ஆண்டுகளில் மாதம் 43,500 ரூபாயை முதலீடு செய்ய வேண்டும்.
அதேபோல, 15 ஆண்டுகளில் சேமிக்க வேண்டும் என்றால் மாதம் ரூ.20 ஆயிரம் முதலீடு செய்ய வேண்டும். இதன்படி பார்த்தால் ஆண்டுகள் அதிகரிக்க நாம் செய்யும் முதலீட்டு தொகையும் கணிசமாக குறைந்துவரும்.
இதில், நீங்கள் 30 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாயை சேமிக்க வேண்டும் என்றால் மாதம் ரூ.3000 முதலீடு செய்தால் போதுமானது.
இதுவே நீங்கள் ரூ.10 கோடியை சேமிக்க வேண்டும் என்றால் 30 ஆண்டுகளில் மாதம் ரூ.28,500 முதலீடு செய்ய வேண்டும்.
நீண்ட கால முதலீட்டில் இருக்கும் நல்ல விடயம் என்னவென்றால் ஆண்டுகள் அதிகரிக்க அதிகரிக்க முதலீடு செய்ய வேண்டிய தொகை கணிசமாகக் குறையும்.
சிறிய தொகையை முதலீடு செய்தால் வட்டி போடும். அந்த வட்டிக்கு வட்டி வரும். இதனால், நீண்ட காலத்தில் மிகப்பெரிய தொகை சேமிக்க முடியும். இதை தான் snowball effect என்று சொல்வார்கள்.
இந்த செய்தியை நீங்கள் முதலீடு செய்வதற்குரிய ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் முதலீடு செய்வதற்குரிய முடிவை எடுக்கும் போது பொருளாதார ஆலோசகரிடம் ஆலோசனை கேட்ட பிறகு முடிவை எடுக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |