டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்.., தீ விபத்தால் அம்பலமான சம்பவம்
நீதிபதியின் பங்களாவில் ஏற்பட்ட தீ விபத்தில் அதிக அளவில் பணம் மீட்கப்பட்டதையடுத்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தீ விபத்தால் அம்பலம்
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின் பெயரில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் டெல்லியில் இல்லாத சமயத்தில் அவரது பங்களாவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர், தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர்.
அப்போது, அவரது வீட்டில் பல அறைகளில் அதிக அளவில் பணம் இருந்ததை தீயணைப்புத் துறையினர் கண்டுபிடித்து மீட்டனர். அதாவது நீதிபதியின் வீட்டில் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால், அவரை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் முடிவு செய்தது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான கொலிஜீயம், யஷ்வந்த் வர்மாவை இடமாற்றம் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்தது.
முன்னதாக, கடந்த 2021 அக்டோபரில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வர்மா பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், இவரை இடமாற்றம் செய்தாலும் யஷ்வந்த் வர்மா ராஜினாமா செய்ய வேண்டும் என்று கொலிஜீயம் உறுப்பினர்கள் சிலர் கூறுகின்றனர்.
ஆனால், அவர் ராஜினாமா செய்ய மறுத்தால் ஒரு உள்விசாரணை குழுவினை அமைக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
புகார் பெறப்பட்ட நீதிபதியிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம் கேட்பார். இதில், அவருக்கு உடன்பாடு இல்லாத பட்சத்தில் ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய உள்விசாரணைக் குழுவினை அமைக்கலாம்.
நாடாளுமன்றத்தால் நீதிபதி ஒருவர் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கான முதல் படி தான் விசாரணைக் குழு ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |