எம்.எல்.ஏ வீட்டு திருமணத்தில் அள்ளி வீசப்பட்ட பணம்; துடைப்பத்தால் கூட்டி அள்ளினர்
currency notes thrown and sweep on floor in bihar mla daughter marriage: பீகார் எம்.எல்.ஏ.வான அனந்த் சிங்கின் மகள் திருமணத்தில் அள்ளி வீசப்பட்ட பணத்தை, அங்கிருந்தவர்கள் துடைப்பம் மூலமாக கூட்டி அள்ளியது வைரலாகி வருகிறது.
அனந்த் சிங் மகள் திருமணம்
பீகாரை சேர்ந்த எம்.எல்.ஏ.வான அனந்த் சிங்கின் இளைய மகள் ஷிவாங்கி சிங்கிற்கு, ரிஷிகேஷ் குமார் என்பவருடன் நேற்று பாட்னாவிலிருந்து சுமார் 65 கி.மீ (40.4 மைல்கள்) தொலைவில் உள்ள நடாவா கிராமத்தில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.

மணமகன் ரிஷிகேஷ் குமார், அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள ஜார்ஜியா மாகாணப் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர். இவரது தந்தை ரன்விஜய் குமார் சிங், மத்திய ரிசர்வ் காவல் படையில் கமாண்டன்ட்டாகப் பணியாற்றுகிறார்.
மணமகன் ரிஷிகேஷ் குமார், 151 கார்கள் கொண்ட வாகன அணிவகுப்பில் வந்தார். திருமணப் பரிசாக மணமகன் ரிஷிகேஷுக்கு, ஆனந்த் சிங் சுமார் ரூ.2.5 கோடி மதிப்புள்ள 'லேண்ட் ரோவர் டிஃபென்டர்' காரை வழங்கியுள்ளார்.

இந்த திருமணத்தில், பீகார் சட்டமன்ற சபாநாயகர் மற்றும் பல முக்கிய உள்ளூர், தேசிய அரசியல்வாதிகள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
திருமணத்தில் கலந்து கொள்ள அழைப்பிதழ் தேவையில்லை என கூறியதால், லட்சக்கணக்கான மக்கள் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
துடைப்பம் மூலமாக கூட்டி அள்ளப்பட்ட பணம்

திருமண நிகழ்வில் நடனமாடிய நடனக்கலைஞர்கள் மீது பணம் வீசப்பட்டது. அந்த பணத்தை அங்கிருந்தவர்கள் துடைப்பம் மூலமாக கூட்டி அள்ளினர்.
At the wedding of Mokama MLA Anant Singh’s daughter, Shivangi Singh, people were seen sweeping up scattered currency notes from the ground. 🔗 https://t.co/uNFgnwDTLk https://t.co/hFL5lywsz6
— The Indian Express (@IndianExpress) November 26, 2026
சுமார் 5 லட்சத்திற்கு அதிகமான மக்கள் கலந்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அந்த கிராமத்தின் சாலை பல மணி நேரத்திற்கு போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது.
முக்கிய விருந்தினர்களை வரவேற்பதற்காக, கிராமத்தில் 6 ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டன.
மேலும், தற்காலிக சமையலறைகளில் நூற்றுக்கணக்கான சமையல்காரர்களால், 50 லட்சம் குலாப் ஜாமுன், 30 லட்சம் ரசகுல்லா, 10,000 லிட்டர் பால், 1,000 கிலோ பனீர் என 150க்கும் மேற்பட்ட உணவு வகைகள் தயாரிக்கப்பட்டன.
Success Stories of Poverty elevation program of BJP in Bihar Hundreds of villagers watching the marriage function of the daughter of a goon cum politician in Bihar, India. Life of a poor has no value in India! https://t.co/ygvbhEvpZJ
— @Moini (@moini_565) November 26, 2026
குதிரை பந்தயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் பங்குபெற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 54 குதிரைகள் வரவழைக்கப்பட்டன. குதிரைப் பந்தயத்தைக் காண வந்த கூட்டம் அங்கே இருந்த உயர்மின்அழுத்த மின் கோபுரம் மீது ஏறி தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குதிரை பந்தய வெற்றியாளருக்கு, ஒரு வெள்ளை நிற SUV காரினை வழங்க உள்ளார்.
மொகாமா தொகுதியிலிருந்து 5 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனந்த் சிங் மீது, கொலை வழக்கு உட்பட 20 வழக்குகள் உள்ளன.

கொலை வழக்கில் சிறை சென்று தற்போது ஜாமீனில் உள்ள அவர், வரும் டிசம்பர் 3 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக நாடே வியக்கும் வகையில் தனது மகளின் திருமணத்தை நடத்தியுள்ளார்.