பிரித்தானியாவுடன் இணைந்து செயல்பட தயார்! பிரான்ஸ் அரசு திடீர் அறிவிப்பு
பிரான்ஸ் அரசாங்கம் பிரித்தானியாவுடன் சேர்ந்து செயல்பட தயாராக உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவை நோக்கி சட்டவிரோதமாக ஏராளமான புலம்பெயர்ந்தோர் படையெடுத்து வருகின்றனர். இது குறித்து பிரித்தானியா அரசு, பிரான்ஸ்க்கு பல கண்டனங்களை தெரிவித்து வருகின்றது.
இந்நிலையில் பிரான்ஸின் உள்துறை அமைச்சர் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சொந்தமான Frontex விமானம் ஒன்று இரவு பகலாக ஆங்கில கால்வாயை கண்காணிக்கும் என்று தெரிவித்தார்.
பிரான்ஸ், பிரித்தானியாவோடு இணைந்து பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிகளை தடுக்க செயல்பட தயார் என்றும் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய எல்லை பாதுகாப்பு படைக்கு சொந்தமான விமானம் பிரான்ஸ் கரையோர பகுதியில் இருந்து நெதர்லாந்து வரை இரவும் பகலுமாக கண்காணிப்பு பணி தொடரும்.
இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் வரும் புதன் கிழமையில் இருந்து ஆரம்பமாகும். இருப்பினும், பிரித்தானிய உள்துறை அமைச்சர் ப்ரிட்டி பட்டேல் அவர்களை பாரிஸில் நடைபெற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான அகதிகள் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்ள வரவேற்கவில்லை.
இதற்கு முக்கிய காரணம் பிரித்தானிய பிரிதமர் போரிஸ் ஜோன்சன் அவர்கள் இம்மானுவேல் மக்ரோன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதே காரணம் என்று கூறப்படுகிறது.