மோட்டார் சைக்கிள் மீது குதித்த குரங்கு... விபத்தில் சிறுமி உட்பட இருவர் பலி
Monkey leaps from tree onto biker’s helmet in UP, he and 6-year-old child killed: மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர் மீது குரங்கு குதித்ததால் நிகழ்ந்த விபத்தில் இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளன.
புதன்கிழமையன்று, இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கமலேஷ் குமார் (40) என்பவரும் அவரது தம்பி மகளும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
மரத்திலிருந்து குதித்த குரங்கு
அப்போது திடீரென மரம் ஒன்றிலிருந்து குரங்கு ஒன்று கமலேஷின் தலையில் குதித்துள்ளது. திடீரென ஹெல்மெட் மீது ஏதோ விழுந்ததால் அதிர்ச்சியடைந்த கமலேஷ் தடுமாற, அவரது மோட்டார் சைக்கிள் கவிழ்ந்துள்ளது.

கமலேஷின் தம்பி மகளான சமிக்ஷா சாலையில் சென்று விழ, வேகமாக வந்த கார் ஒன்று பிள்ளை மீது ஏறியிறங்க, அவள் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டிருக்கிறாள்.
படுகாயமடைந்த கமலேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரண்டு மணி நேரம் சென்றதும், அவரது உயிரும் பிரிந்துள்ளது.
குரங்கு ஒன்றின் செயலால் இரண்டு உயிர்கள் பலியான விடயம் அப்பகுதியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.