குரங்கை கூட விட்டு வைக்காத திருடர்கள்: ஜேர்மனியில் உயிரியல் பூங்காவில் கைவரிசை
ஆடு, மாடு போன்ற கால்நடைகளை திருடர்கள் திருடுவதைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், ஜேர்மனியில், உயிரியல் பூங்கா ஒன்றிலிருந்து குரங்கு ஒன்றை திருடிச் சென்றுள்ளார்கள் மர்ம நபர்கள் சிலர்.
குரங்கை கூட விட்டு வைக்காத திருடர்கள்
ஈஸ்டர் தினத்தன்று, ஜேர்மனியின் Leipzig நகரிலுள்ள உயிரியல் பூங்கா பணியாளர்கள், விலங்குகளை சரிபார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது, அரியவகை சிங்க வால் குரங்கு ஒன்றைக் காணவில்லை என்பது அவர்களுக்குத் தெரியவந்துள்ளது.
Image: Zoo Leipzig/dpa/picture alliance
மேலதிக ஆய்வில், உயிரியல் பூங்காவுக்குள் மர்ம நபர்கள் சிலர் அத்துமீறி நுழைந்துள்ளதும், அவர்கள் அந்தக் குரங்கை பொறிவைத்துப் பிடித்துள்ளதும் தெரியவந்தது.
Ruma என்று பெயரிடப்பட்டுள்ள அந்த பெண் சிங்கவால் குரங்குக்கு 15 வயதாகிறது. சிங்கவால் குரங்குகள் அழிவின் விளிம்பிலிருக்கும் விலங்குகள் ஆகும்.
Image: Michael Schöne/Zoonar/picture alliance
அதே உயிரியல் பூங்காவில் ஒரு 12 வயதுடைய Yenur என்னும் ஆண் சிங்கவால் குரங்கும் உள்ளது. அதைப் பிடிக்க யாரும் முயற்சி செய்ததுபோல் தெரியவில்லை. ஆனால், விடயம் என்னவென்றால், இந்த வகை குரங்குகள் சேர்ந்து வாழும் குணம் கொண்டவை என்பதால், தன் துணையைப் பிரிந்த Yenur கவலையில் ஆழ்ந்துள்ளதாம்.
இத்தகைய குரங்குகளை வீடுகளில் வளர்ப்பது கடினம். அப்படியிருக்கும்போது, அந்த திருடர்கள் எதற்காக அதைத் திருடிச் சென்றார்கள் என்பது தெரியவில்லை. பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |