வேகமெடுக்கும் Monkeypox பரவல்... முதல் முறையாக வேல்ஸில் பாதிப்பு உறுதி
பிரித்தானியாவின் வேல்ஸில் முதன்முறையாக ஒருவருக்கு Monkeypox தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளாதாக வேல்ஸ் பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதனால் பிரித்தனியாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட Monkeypox தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 79 என தெரியவந்துள்ளது.
வேல்ஸ் பொது சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் கிரி ஷங்கர் தெரிவிக்கையில், ஸ்கொட்லாந்து சுகாதாரத்துறை, வடக்கு அயர்லாந்து மற்றும் பிரித்தானிய பொது சுகாதாரத்துறையுடன் Monkeypox பரவல் விவகாரத்தில் இணைந்து பணியாற்ற இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்டவரின் நலன் கருதி, அவரது மேலதிக தகவல்களை வெளியிடவும் மறுப்பு தெரிவித்துள்ளார் மட்டுமின்றி, Monkeypox பொதுவாக மக்களிடையே எளிதில் பரவாது, பொது மக்களுக்கு இதனால் அச்சுறுத்தல் மிகக் குறைவு என்றும் மக்களுக்கு உறுதியளிக்கிறோம் எனவும் மருத்துவர் கிரி ஷங்கர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் சில வாரங்களில் பூரண குணமடைய முடியும் எனவும், ஒருசிலருக்கு மட்டுமே தீவிர சிகிச்சை தேவைப்படும் என்றார்.
மட்டுமின்றி, பல பாலியல் பங்காளிகளைக் கொண்டவர்கள், எந்த அறிகுறிகளிலும் குறிப்பாக விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள், ஏனெனில் இந்த நோய் நெருங்கிய தொடர்பு மூலம் பரவுகிறது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Monkeypox தொற்றின் அறிகுறிகள் காணப்படும் நபர்கள் கண்டிப்பாக 21 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என பிரித்தானிய பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.