Monkeypox பரவல்... பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Monkeypox ‎Monkeypox virus
By Arbin May 31, 2022 08:00 PM GMT
Report

பிரித்தானியாவில் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 11 அதிகரித்துள்ள நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 190 என உயர்ந்துள்ளது.

பிரித்தானியாவில் முதல் குரங்கம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு மூன்று வாரங்களுக்கு மேல் ஆகியுள்ளது. அன்றிலிருந்து பாதிப்பு எண்ணிக்கை மிகப்பெரிய அதிகரிப்பைக் கண்டு வந்துள்ளது.

மட்டுமின்றி நேற்றிலிருந்து பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது. பிரித்தானியாவில் இதுவரை குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 183 ஆக உள்ளது,

Monkeypox பரவல்... பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Monkeypox Infection Spreads Uk Stay Alert

ஸ்கொட்லாந்தில் நான்கு பேர்களுக்கு குரங்கம்மை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, வடக்கு அயர்லாந்தில் இரண்டு மற்றும் வேல்ஸில் ஒருவருக்கும் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, குரங்கம்மை தொற்றால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் என்பது மிகக் குறைவே என தெரிவித்துள்ளார் UKHSA-வுக்கான மூத்த மருத்துவ ஆலோசகர் Dr Ruth Milton. இருப்பினும், தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவது நமது அனைவரின் பொறுப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், குரங்கம்மை தொற்று தொடர்பில் எச்சரிக்கை தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவருக்கேனும் குரங்கம்மை அறிகுறி தென்பட்டால் தாமதப்படுத்தாமல் 111 இலக்கத்திற்கு தொடர்புகொள்ள வேண்டும் எனவும் அல்லது அவர்களுக்கு அருகாமையில் உள்ள பாலியல் சுகாதார சேவையை நாட வேண்டும் என Dr Ruth Milton கேட்டுக்கொண்டுள்ளார்.

Monkeypox பரவல்... பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Monkeypox Infection Spreads Uk Stay Alert

பிரித்தானியாவில் முதல் தொற்று மே 7ம் திகதி உறுதி செய்யப்பட்டுள்ளது. 1970களில் இருந்தே காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் குரங்கம்மை தொற்று காணப்பட்டு வருகிறது.

சமீபத்திய வாரங்களில் ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடுகளில் 300 பேர்களுக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தொற்று பரவாமல் இருக்க, உடலுறவு கொள்வதை நிறுத்துமாறு, சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று கேட்டுக்கொண்டுள்ளனர். தம்பதிகள் நெருக்கமாக இருப்பதாலும் குரங்கம்மை பரவ வாய்ப்பிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தரப்பு எச்சரித்துள்ளது. 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US