Monkeypox தொற்றை ஒருபோதும் ஒழிக்க முடியாது: பிரித்தானிய நிபுணர் விடுக்கும் எச்சரிக்கை
Monkeypox தொற்றானது உலகம் முழுவதும் பரவும் வாய்ப்புகள் அதிகம் எனவும், ஒருபோதும் அதை ஒழிக்க முடியாது எனவும் நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
லண்டனை சேர்ந்த மருத்துவர் Adam Kucharski தெரிவிக்கையில், தற்போதைய Monkeypox பரவல் என்பது கொரோனா போன்ற ஒரு தொற்றுநோயாக பாதிப்பை ஏற்படுத்துவது சாத்தியமில்லை எனவும், நெருங்கிய தொடர்பு மூலம் மட்டுமே பரவுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து Monkeypox தொற்றானது ஒருபோதும் ஒழிக்க முடியாது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வளர்ப்பு மிருங்களின் மூலம் குறித்த தொற்றானது மேலும் பரவும் ஆபத்து அதிகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஐரோப்பிய ஒன்றிய சுகாதாரத் தலைவர்கள் ஏற்கனவே இந்த அச்சுறுத்தலை ஒப்புக்கொண்டுள்ளதுடன், குரங்கம்மை நோயாளிகளுக்கு சொந்தமான அனைத்து வெள்ளெலிகள், ஜெர்பில்கள் மற்றும் கினிப் பன்றிகளை அழிக்க பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவிலும், குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் செல்லபிராணிகளில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
தற்போது இங்கிலாந்தின் நான்கு நாடுகளிலும் Monkeypox நோய் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 90 என அதிகரித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள இருபது நாடுகள் இப்போது தற்போதைய Monkeypox தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன, இந்த வரிசையில் பின்லாந்தில் புதிதாக குரங்கம்மை தொற்றுநோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, அர்ஜென்டினா, பொலிவியா மற்றும் சூடான் நாடுகளில் சந்தேகத்திற்குரிய பாதிப்புகளை விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.