சிறுமியை சீரழிக்க முயன்ற மர்ம நபர்... ஹீரோவாக காப்பாற்றிய குரங்குகள்: ஒரு ஆச்சரிய சம்பவம்
இந்திய நகரம் ஒன்றில், ஒரு ஆறு வயது சிறுமியை ஒருவர் சீரழிக்க முயன்றபோது, சில குரங்குகள் அந்த சிறுமியைக் காப்பாற்றியதைக் குறித்த ஆச்சரிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்ற மர்ம நபர்
இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள Baghpat என்னுமிடத்தில், மர்ம நபர் ஒருவர் விளையாடிக்கொண்டிருந்த ஒரு ஆறு வயது சிறுமி ஒருத்தியை சீரழிக்கும் நோக்கத்துடன், பாழடைந்த வீடு ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

Credit: Twitter
அவர் அந்தச் சிறுமியின் ஆடைகளை அகற்றி அவளிடம் தவறான முறையில் நடந்துகொள்ள முயலும்போது, திடீரென ஒரு கூட்டம் குரங்குகள் அவர் மீது பாய்ந்துள்ளன.
திடீரென ஒரு கூட்டம் குரங்குகள் தன் மீது பாய்ந்ததால் அந்த நபர் பயந்து ஓட, வீடு திரும்பிய அந்தச் சிறுமி நடந்ததை தன் பெற்றோரிடம் கூறியுள்ளாள்.

Credit: Getty
அவளைக் கொன்றுவிடுவதாக அந்த நபர் மிரட்டியதாகவும் தெரிவித்துள்ள அந்தச் சிறுமியின் தந்தை, அந்தக் குரங்குகள் மட்டும் இல்லையென்றல், தன் மகள் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என்கிறார்.
இதற்கிடையில், அந்தச் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்ற அந்த மர்ம நபர் தப்பியோடிவிட்ட நிலையில், பொலிசார் அவரை தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.

Credit: Getty
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |