வாழைப்பழத்துக்காக சண்டை போட்ட குரங்குகள்.., ரயிலை நிறுத்தியதால் மக்கள் அவதி
வாழைப்பழத்துக்காக 2 குரங்குகள் சண்டை போட்டதால் பல ரயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
ரயில்கள் நிறுத்தம்
இந்திய மாநிலமான பீகார், சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் நடைமேடை எண் 4க்கு அருகே இரண்டு குரங்குகள் சேர்ந்து வாழைப்பழத்துக்காக சண்டை போட்டு கொண்டிருந்தது.
அதில் ஒன்று ரப்பர் பொருளை எடுத்து மற்றொரு குரங்கின் மீது வீசுகையில் ரயிலின் மின்சார மேல்நிலைக் கம்பியின் மீது பட்டு கோளாறு ஏற்பட்டுள்ளது.
பின்னர், மின்சார கம்பிகள் அறுந்து விழுந்ததால் பிளாட்பார்மில் ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, கம்பியை சரிசெய்யும் பணியை ரயில்வே அதிகாரிகள் மேற்கொண்டனர்.
பின்னர், பிரச்சனை சரிசெய்த பிறகு பீகார் சம்பர்க் கிராந்தி ரயில் தாமதமாக கிளம்பியது. இதனால், அடுத்து வரும் ரயில்களும் தாமதமாக வந்தன.
சமீபத்தில், சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் குரங்குகளால் பயணிகளுக்கு காயம் ஏற்பட்டபோது அவை வனத்துறையினரால் பிடிக்கப்பட்டன. இருந்தாலும் இந்த ரயில் நிலையத்தில் குரங்குகள் தொல்லை அதிகமாகவே உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |