10 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற பெற்றோர்: பிரித்தானியாவில் அதிர்ச்சி சம்பவம்
பிரித்தானியாவில் 10 மாத குழந்தையை 130 காயங்களோடு, தம்பதியர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
10 மாத குழந்தை
பிரித்தானியாவில் 10 மாத குழந்தையை கொலை செய்ததற்காக, சன்னோம் மார்ஸ்டென்(27) மற்றும் அவரது கணவரனான ஸ்டீபன் போடன்(29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் தங்களது 10 வயது குழந்தையை அடித்து சித்திரவதை செய்து, கொடூரமாக கொலை செய்த சம்பவம் பிரித்தானிய நீதிமன்றத்தையே நடுங்க வைத்துள்ளது.
@pa
கடந்த 2020ஆம் ஆண்டு மிகவும் மோசமான அறையில் 71 காயங்களோடும், 57 எலும்பு முறிவுகளோடும் மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும் குழந்தையின் வலது கரங்களில் சிக்ரெட் லைட்டரால், சூடு வைக்கப்பட்டு கொடூரமாக குழந்தையை கொலை செய்துள்ளனர்.
மோசமான சம்பவம்
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர், நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக குற்றவாளி கூண்டில் நின்றிருந்தனர்.
அப்போது நீதிபதி அவர்களை பார்த்து ’இந்த குற்றத்திற்காக நீங்கள் வருத்தபடுகிறீர்களா?’ என கேட்கப்பட்ட கேள்விக்கு இருவரும் எந்த பதிலும் அளிக்காமல் அமைதியாக இருந்திருக்கிறார்கள்.
@pa
இதனிடையே இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ‘நீங்கள் செய்தது மன்னிக்க இயலா குற்றம், ஒன்றுமறியா பத்து மாத குழந்தையை இவ்வளவு கொடூரமாக கொலை செய்ய எப்படி மனம் வந்தது? இதற்கான தண்டனையை நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும், என் அனுபவத்தில் இப்படி ஒரு கொடூரமான வழக்கை நான் சந்தித்ததே இல்லை’ என கூறியிருக்கிறார்.
@Derbyshire Police
இதனை தொடர்ந்து இருவருக்கும் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் பொலிஸார் குழந்தை கொலை செய்யப்பட்ட வீட்டின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில் ஒழுங்கீனமற்ற மிகவும் மோசமான அறையின் நிலையை அவை பிரதிபலிக்கின்றன.
@Derbyshire Police
மேலும் சன்னோம் மார்ஸ்டென் கர்ப்பமாக இருந்த போது அளவுக்கு அதிகமாக, கஞ்சா மற்றும் பிற போதை பொருட்களை பயன்படுத்தியதாகவும், விசாரணையில் தெரிய வந்துள்ளது.