நகராமல் நின்ற மொந்தா புயல்.., எப்போது கரையை கடக்கும்?
வங்கக்கடலில் உருவான மொந்தா புயல், தீவிரப் புயலாக வலுப்பெற்று, ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில், திடீர் திருப்பமாக இந்த மொந்தா புயல் நகரும் வேகம் குறைந்து உள்ளது. தொடக்கத்தில் வேகமாக நகர்ந்த புயல் தற்போது கிட்டத்தட்ட நகராத நிலைக்கு வந்துள்ளது.
தொடக்கத்தில் புயல் நகரும் வேகம் 25 கிமீ என்ற அளவில் இருந்த நிலையில், தற்போது புயல் நகரும் வேகம் 10 கிமீ என்று மாறியுள்ளது.
இந்தப் புயலால் பலத்த காற்றும், கனமழையும் பெய்யக்கூடும் என்பதால், இரு மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று மாலை அல்லது இரவுக்குள் இந்தப் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி, மொந்தா புயல் விசாகப்பட்டினம் அருகே காக்கிநாடாவில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், காக்கிநாடா கடற்கரை பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றும், பலத்த மழையும் பெய்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |