வங்கக்கடலில் உருவாகும் Montha புயல் - சென்னைக்கு மிக கனமழையா?
வங்கக்கடலில் உருவாக உள்ள புயலுக்கு Montha என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Montha புயல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது.
வங்கக்கடலில் உருவாக இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வலுவிழந்ததால் மழை குறைந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெயில் அடிக்க தொடங்கியது.

இந்நிலையில், இன்று காலை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிப்பதோடு, சில பகுதிகளில் தூறல் மழை பெய்கிறது.
இந்த புதிய காற்றழுத்தாழ்வு பகுதியானது வரும் அக்டோபர் 26 ஆம் திகதி, காற்றழுத்தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், அக்டோபர் 27 ஆம் திகதி புயலாக வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு தெரிவித்துள்ளது.
இந்த புயலுக்கு தாய்லாந்து பரிந்துரைத்த மோன்தா(Montha) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அக்டோபர் 27 ஆம் திகதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களுக்கும் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |