பற்றியெரியும் கனேடிய நகரம்... இரவு கொண்டாட்டத்தில் நடனமாடி மகிழ்ந்த ஜஸ்டின் ட்ரூடோ
கனடாவின் மாண்ட்ரீல் நகரம் இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களால் பற்றியெரியும் நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ Taylor Swift இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெதன்யாகு உருவபொம்மை எரிப்பு
முதன்மையான நகரமொன்றில் கலவரம் வெடித்துள்ள நிலையில், அது தொடர்பில் ட்ரூடோ எந்த கருத்தும் தெரிவிக்காதது கடும் விமர்சனத்திற்கு காரணமாகியுள்ளது.
மட்டுமின்றி, சம்பவம் நடக்கும் வெள்ளிக்கிழமை இரவு பிரதமர் ட்ரூடோ Taylor Swift இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளதும் விவாதமாகியுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கார்களுக்கு நெருப்பு வைத்தனர், கடையின் கண்ணாடிகளை உடைத்தனர் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உருவ பொம்மையை எரித்தனர்.
நகரின் பல சாலைகள் கலவர பூமியானது. கூட்டத்தை கலைக்க கலவரத் தடுப்பு பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர், மேலும் இந்த சம்பவங்களின் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு, பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஒரு நகரமே பற்றியெரிய, எந்த கவலையும் இன்றி பிரதமர் ட்ரூடோ நடனமாடி மகிழ்ந்துள்ளார் என்றே கனேடிய மக்கள் தற்போது குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், கியூபெக் செனட்டர் Leo Housakos தமது சமூக ஊடக பதிவொன்றில்,
ட்ரூடோ இசை விருந்தில்
இன்றிரவு, ஜஸ்டின் ட்ரூடோ ரொறன்ரோவில் இசை விருந்தில் கலந்துகொண்டு நடனமாடி மகிழ்ந்திருக்கும்போது, மாண்ட்ரீலின் யூத சமூகத்தைச் சேர்ந்த பலரை நான் சந்தித்து நலம் விசாரித்துள்ளேன் என்றார்.
இஸ்ரேல் பிரதமரை கைது செய்வதாக ஹமாஸ் ஆதரவு கூட்டத்திற்கு உறுதி அளித்துள்ள ட்ரூடோ, தற்போது இசை விருந்தில் மகிழ்ந்திருக்க சென்றுள்ளார் என்றும் அவர் தமது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோவின் செயல் கனேடிய பொதுமக்கள் பலரை உண்மையில் கோபமடையச் செய்துள்ளது என்றே கூறப்படுகிறது. ரொறன்ரோ கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் இருந்து மேற்கே 280 மைல் தொலைவிலும் மாண்ட்ரீல் மாவட்டத்திற்கு மேற்கே 330 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |