இனி ஒரு நாளுக்கு 25 மணி நேரம்? பூமியை விட்டு நிலவு விலகுவது ஆய்வில் கண்டுபிடிப்பு
பூமியின் துணைக்கோளான நிலவு பூமியை விட்டு மெதுவாக விலகி செல்வது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
பூமியை விட்டு விலகும் நிலவு
விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தின் (University of Wisconsin-Madison ) ஒரு குழு இந்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வின் மூலம் பூமியில் இருந்து நிலவு விலகி செல்வது தெரியவந்துள்ளது.
இதனால், பூமியில் பலவிதமான மாற்றங்கள் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நிலவு, பூமியிலிருந்து 3.82 சென்டிமீட்டர் தொலைவில் விலகி செல்வது கண்டறியப்பட்டது. இந்த காரணத்தினால் பூமியின் பகல் நேரம் அதிகரிக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது பூமியில் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் இருக்கும் நிலையில், நிலவு விலகி செல்வதால் அது 25 மணி நேரமாக மாறும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இந்த மாற்றம் பூமியில் 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும். சுமார் 1.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஒரு நாளைக்கு 18 மணிநேரம் என இருந்துள்ளது.
அது பல அது மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னரே 24 மணி நேரமாக மாறி இருக்கிறது. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பூமிக்கும், நிலவுக்கும் இடையேவுள்ள ஈர்ப்பு விசை தான். இந்த இரண்டிற்கும் அலை சக்திகளில் ஏற்படும் மாற்றம் தான் முக்கிய காரணமாகும்.
இது தொடர்பாக விஸ்கான்சின்- மாடிசன் பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் பேராசிரியர் ஸ்டீபன் மேயர்ஸ் (Stephen Meyers) கூறுகையில், "பூமியில் இருந்து நிலவு விலகி செல்வதால் பூமியின் சுழலும் வேகம் குறையும். இதனால் பூமியில் பகல் நேரம் அதிகரிக்கும்.
இதையடுத்து, பல பில்லியன் கணக்கான ஆண்டுகள் பழமையான பாறைகளை ஆய்வு செய்ய விரும்புகிறோம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |