நிலவில் ஆராய்ச்சியை மேற்கொள்ள சீனா தயார்... இந்தியாவின் வெற்றியை முறியடிக்குமா?
நிலவில் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக 2028 ஆம் ஆண்டு ஒரு விண்கலத்தை விண்ணில் செலுத்த சீனா திட்டமிட்டுள்ளது.
சீனாவின் திட்டம்
Chang'e-6 என அழைக்கப்படும் விண்கலத்தின் அடுத்த பணிக்கான ஆயத்தங்கள் சீராக நடந்து வருவதாக சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் கடந்த வாரம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் இணைந்து செயல்பட உலக நாடுகளுக்கு சீனா அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதில் இணைய விரும்பும் நாடுகள் தங்களை தொடர்புக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது.
CFP
அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் எந்த நாட்டுடன் இணைந்து செயல்படுவது என்பது பற்றி அறிவிக்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது.
2040 ஆம் ஆண்டுக்குள் சந்திரனின் தென் துருவத்தில் நிரந்தர சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான மதிப்புமிக்க தரவுகளை உருவாக்குவதற்கு, 2026 இல் திட்டமிடப்பட்ட Chang'e-7 மிஷன் உதவும் என்று சீனா எதிர்பார்த்து காத்திருகின்றது.
இது வரை நடந்த சந்திர பயணங்கள்
கடந்த மாதம், இந்தியா தனது சந்திரயான் -3 விண்கலத்தை நிலவில் தரையிறக்கியது. இந்த சாதனையை நிறைவேற்றிய நான்காவது நாடாக ஆனது.
அதே வாரத்தில், ரஷ்யாவின் முதல் சந்திர பயணம் லூனா 25 விண்கலம் சந்திரனின் மேற்பரப்பில் மோதி தோல்வியில் முடிந்தது.
அமெரிக்காவும் 2025 இல் விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்பி அங்கு ஒரு அறிவியல் அடிப்படை முகாமை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாசாவும் சந்திரனின் தென் துருவத்தை கண்காணித்து வருகிறது.
Chang'e-6 விண்கலத்தின் நோக்கம்
நிலவில் இதுவரை எடுக்கப்படாத இடத்தில் இருந்து மாதிரிகளை கொண்டுவந்து ஆய்வு உள்ளிட்டவற்றை நடத்த சீனா திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.