30 விநாடிகளில் தோன்றி மறைந்த பிரம்மாண்ட நிலவு... பரபரப்பை ஏற்படுத்திய ஒரு செய்தி
நேற்று சூப்பர் நிலவு, இரத்த நிலவு என உலகமே பரபரப்பாக நிலவைப் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், இணையத்தில் ஒரு செய்தி பரபரப்பாக பரவியது.
கனடாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் 30 விநாடிகளில் நிலவு தோன்றி மறையும் ஒரு காட்சியைக் காட்டும் வீடியோ வைரலானது.
அது உண்மையா எனக் கண்டறிய சர்வதேச அமைப்புகள் பல பரபரப்பாக களமிறங்கின. கடைசியில், அது உண்மையல்ல, கணினியின் உதவியால் திறமைவாய்ந்த ஒருவர் உருவாக்கிய போலியான தோற்றம் என்பதும், அதை உருவாக்கியவர் Aleksey என்பவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த Aleksey என்பவர் ஏற்கனவே பறக்கும் தட்டுக்கள் நிலவின் அருகில் பறப்பது போன்ற ஒரு வீடியோவை உருவாக்கியிருந்ததும், அந்த வீடியோவும் வைரலானதும் குறிப்பிடத்தக்கது.
Many questions about this obvious CG/VFX animation. My only problem is that I haven't found the artist yet. Does anyone know the source?
— HoaxEye (@hoaxeye) May 26, 2021
This clip reminds of this animation from 2013: https://t.co/OCbZaPcIVU https://t.co/XZu9Q1qG06