தள்ளாடும் நிலவு... அடுத்த பல ஆண்டுகளுக்கு ஏற்படுத்த இருக்கும் மோசமான விளைவுகள்: ஒரு திடுக் செய்தி
நாசாவின் சமீபத்தைய ஆய்வு ஒன்று, நிலவு தள்ளாடுவதாக தெரிவித்துள்ளது. அதன் காரணமாக அடுத்த பல ஆண்டுகளுக்கு கடலில் அலைகள் மிக உயரமாக எழும் என்றும், அதனால் பெருவெள்ள அபாயம் ஏற்படும் என்றும் எச்சரிக்கும் நிபுணர்கள்,
ஏற்கனவே பருவ நிலையில் மோசமான மாற்றங்களை நாம் காணத்தொடங்கிவிட்டோம் என்றும், பருவ நிலை மாற்றங்களின் விளைவுகளால், மேலும் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
நிலவு தள்ளாடுவதால் ஏற்படும் விளைவுகள், பருவ நிலை மாற்றத்தால் கடற்கரை பகுதிகளை பெருமளவில் பாதிக்கும் என்றும், அவை நடைமுறையில் தற்போது கனடாவில் உணரப்படுவதாகவும், வானியல் நிபுணர்கள் பலர் தெரிவிக்கிறார்கள்.
நிலவு தள்ளாடுதல் என்பது உண்மையில் நிலவு தள்ளாடுதல் அல்ல, நிலவு தனது வட்டப்பாதையில் சரியாக பயணிக்காமல், சற்று விலகி விலகி பயணிப்பதே நிலவு தள்ளாடுதல் என கூறப்படுகிறது.
அதுவும் இந்த நிகழ்வு ஒன்றும் புதிதல்ல, 1700ஆம் ஆண்டுகளிலேயே அது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், மக்களுடைய தலையீட்டால் பருவ நிலை மாற்றங்கள் மோசமடைந்து வருவதையடுத்து, இந்த நிலவு தள்ளாடுதலின் விளைவுகள் இன்னமும் மோசமாகும் என்று கூறும் அறிவியலாளர்கள், கனடாவின் கடற்கரையோரப்பகுதிகளில் கொஞ்சமாக உயரத்தொடங்கும் தண்ணீர் மட்டம், நிரந்தரமாகி கடற்கரைக்கருகில் உள்ள இடங்களை பாதிக்கும் அளவுக்கு அதிகரித்துவிடும் என்கிறார்கள்.
அதனால் ஏற்படும் பெருவெள்ளம் காரணமாக மக்கள் தாங்கள் வாழும் இடங்களை மொத்தமாக காலி செய்துகொண்டு நேறு இடங்களுக்கு குடிபெயரும் நிலை ஏற்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இது வெறும் ஆரம்பம்தான் என்று கூறும் Kees Lokman என்னும் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைகழக ஆய்வாளர், அடுத்த நூறு ஆண்டுகளுக்கும், அதற்குப் பிறகும் கடல் மட்டம் உயரும் என்று நான் கருதுகிறேன் என்கிறார்.