Moonlighting என்றால் என்ன? விரிவான தகவல்
பிரபலமான மென்பொருள் நிறுவனங்கள் பல இந்த moonlighting என்ற கருத்துக்கு எதிராக பேசி வந்தாலும் ஒரு சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அதற்கு அனுமதித்துள்ளது.
Moonlighting என்றால் என்ன?
பொதுவாக ஒரு நிறுவனத்தில் முழுநேர ஊழியராக பணியாற்றிவரும் ஒருவர், தனது பொருளாதார நிலை கருதி இன்னொரு நிறுவனத்திலும் பணியாற்றுவதே moonlighting என அறியப்படுகிறது.
moonlighting என்ற கருத்துக்கு பல மென்பொருள் நிறுவனங்கள் எதிராகவே உள்ளன. தங்களிடம் முறையாக தெரியப்படுத்த தவறிய ஊழியர்கள் நிர்வாகத்தை ஏமாற்றியதாகவே கருதுகின்றனர்.
மட்டுமின்றி, பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் தங்கள் அளிக்கும் வேலை ஒப்பந்தத்தில், முழுநேர ஊழியர்கள் ஒருபோதும் இன்னொரு நிறுவனத்தில் வேலையை முன்னெடுக்க அனுமதிப்பதில்லை என்றே குறிப்பிடுகின்றன.
ஆனால் கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் அனைவரும் குடியிருப்பில் இருந்தே வேலை செய்யும் சூழல் உருவானதால், எஞ்சியிருக்கும் நேரத்தை பயனுள்ளதாக செலவிட, பொருளாதார பலனைப் பெறவும் ஒன்றிற்கும் மேற்பட்ட வேலையில் ஈடுபட்டனர்.
சமீப மாதங்களில் பல முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், வேலையை விட்டு நீக்கியும் உள்ளது.
Moonlighting பேசுபொருளாக காரணம்
moonlighting என்ற கருத்து திடீரென்று பேசுபொருளாக காரணம் Swiggy நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு அனுமதி அளித்துள்ளது. தங்களது ஊழியர்கள், வேலை நேரத்திற்கு பின்னர் அல்லது வார இறுதி நாட்களில் இன்னொரு வேலையை முன்னெடுக்கலாம் என்ற அனுமதியை Swiggy நிறுவனம் அறிவித்துள்ளது.
Swiggy போன்றே குறிப்பிட்ட சில மென்பொருள் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு moonlighting அனுமதி அளித்துள்ளது. ஆனால் Infosys கடந்த ஓராண்டில் moonlighting செய்துவந்த தங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.
Wipro நிறுவனம் கடந்த 2022ல் சுமார் 300 ஊழியர்களை moonlighting காரணமாக நீக்கியுள்ளது. moonlighting என்பது நெறிமுறையற்ற செயல் என்றே TCS நிறுவனம் கூறி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |