ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்க ஆசையா? இந்த ஜூஸ் தொடர்ந்து குடிச்சாலே போதும்!
இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் பலரும் தங்களது உடம்பை குறைக்க பலரும் பெரும்பாடுபட்டு வருகின்றார்கள்.
துரித உணவுகள், உடல் உழைப்பின்மை, உடல் ஆரோக்கியத்தில் கவனம் இல்லாமல் இருப்பது என பல காரணங்கள் உடல் பருமனை ஏற்படுத்துகின்றன.
உடல் எடையை குறைக்க பல எளிய மற்றும் இயற்கையான வழிகளும் உள்ளன. தற்போது உடல் எடையை குறைக்க உதவும் சூப்பரான வழிமுறை ஒன்றை இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- பீட்ரூட் 1 - நறுக்கியது
- பேரிக்காய் - 2நறுக்கியது - பாதி
- வெள்ளரிக்காய் - நறுக்கியது
- இஞ்சி - 1 டீஸ்பூன்
- கேரட் - 1 நறுக்கியது
- புதினா இலைகள்
- உப்பு
- கருப்பு மிளகு - 2
- எலுமிச்சை -1
செயல்முறை
எடையைக் குறைக்க பீட்ரூட், பேரிக்காய், வெள்ளரி, இஞ்சி, கேரட் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து ஜூஸ் செய்யவும். இப்போது அரைத்த கலவையை ஒரு பெரிய பாத்திரத்தில் ஃபில்டர் செய்து கொள்ளவும்.
இதன் பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து உப்பு, மிளகு தூள் சேர்த்து சாறு தயார் செய்யவும். அதன் பின்னர் இந்த சாற்றை ஒரு கிளாஸில் ஊற்றி புதினா இலைகள் கொண்டு அலங்கரிக்கவும்.
எப்போது சாப்பிட வேண்டும்?
உடல் எடையை குறைக்க முயற்சித்துக்கொண்டு இருப்பவர்கள் இந்த சாற்றை உட்கொள்ளலாம்.
இந்த சாற்றை காலை உணவில் சாப்பிடலாம். காலை உணவில் சாப்பிட முடியவில்லை என்றால், மதிய உணவில் சாப்பிடலாம்.
ஆனால் இரவில் இந்த ஜூஸை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் இந்த ஜூஸில் வெள்ளரிக்காய், எலுமிச்சை போன்றவற்றை பயன்படுத்தியிருப்பதால் அதன் தாக்கம் குளிர்ச்சியாக இருப்பதால் இரவில் இதனை உட்கொள்வதால் சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.