சுவிட்சர்லாந்தில் மேலும் மேலும் போதைக்கு அடிமையாகும் மக்கள்: வெளியான காரணம்
சுவிட்சர்லாந்தில் கொரோனா காரணமாக மக்கள் மேலும் மேலும் போதைக்கு ஆளாகும் சூழல் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் மற்றும் கடுமையான ஊரடங்கு விதிகளால் பெரும்பாலும் மக்கள் குடியிருப்பிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டது.
இதில் அதிக நேரம் தனியாக இருக்கும் நிலைமை, சலிப்பு, பொருளாதார நெருக்கடி, குழந்தை பராமரிப்பு மற்றும் ஒரே நேரத்தில் குடியிருப்பில் இருந்தே அலுவலகப் பணிகளை மேற்கொள்வதால் ஏற்பட்ட மன அழுத்தம் என நெருக்கடியான சூழலை எதிர்கொள்ளும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
கொரோனா பரவல் மிகக் குறுகிய காலத்தில் ஒரு தனி மனிதனின் பழக்க வழக்கங்களை முற்றாக மாற்றியுள்ளது.
இந்த நிலையிலேயே சுவிட்சர்லாந்தில் மது மற்றும் போதை மருந்துக்கு ஆளானவர்கள், அதில் இருந்து மீளும் நடவடிக்கையை மேற்கொள்ள அரசு சார்பு உரிய ஆமைப்புகளை நாடியுள்ளது தெரிய வந்துள்ளது.
மாணவர்கள் இணைய வழி கல்வியில் ஈடுபடுவதால், அவர்களின் அதுவரையான அன்றாட நிகழ்வுகளில் மாறுதல் ஏற்பட்டுள்ளது.
இதே நிலைமை இளம் பெண்களிடமும் காணப்பட்டுள்ளது, அவர்கள் தங்கள் நண்பர்களை நேரிடையாக சந்திக்கும் வாய்ப்புகள் முற்றாக இல்லாமல் போனது.
இதனால் எனவே, பதட்டம் மற்றும் தூக்க பிரச்சினைகள் அவர்களுக்குள் அதிகரித்துள்ளன. மாணவர்கள் ஒருபக்கம் அதிகமாக கஞ்சா மற்றும் தூக்க மருந்துகளுக்கு ஆளாகிறார்கள்.
இந்த கொரோனா காலகட்டத்தில் சுவிட்சர்லாந்தில் புகையிலைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் அன்றாடம் மது அருந்துபவர்களின் எண்ணிக்கையும் இந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.