புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்த கூடுதல் அதிகாரிகளை எல்லைக்கு அனுப்பும் சுவிட்சர்லாந்து
இத்தாலியிலிருந்து வரும் புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்துவதற்காக, கூடுதல் அதிகாரிகளை ஒரு மாகாணத்தின் எல்லைக்கு அனுப்புகிறது சுவிட்சர்லாந்து அரசு.
இத்தாலியிலிருந்து கூடுதல் புலம்பெயர்ந்தோர் வரலாம் என எதிர்பார்ப்பு
இத்தாலியிலிருந்து, சுவிட்சர்லாந்தின் Ticino மாகாணம் வழியாக கூடுதல் புலம்பெயர்வோர் சுவிட்சர்லாந்துக்குள் நுழைய முற்படலாம் என அரசு எதிர்பார்க்கிறது.
ஆகவே, தெற்கு எல்லைக்கு கூடுதல் அதிகாரிகளை அனுப்புவதாக, பெடரல் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, 12,000 புலம்பெயர்வோர் இத்தாலியின் Lampedusa தீவுக்கு வந்து சேர்ந்துள்ள நிலையில், அந்தத் தீலிருந்து அவர்கள் Ticino மாகாணம் வழியாக சுவிட்சர்லாந்துக்குள் நுழைய முயற்சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவேதான், சம்பந்தப்பட்ட எல்லைக்கு கூடுதல் அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |