நற்செய்தி! இந்திய மாறுபாடு தொடர்பில் பிரித்தானியா பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல்
கொரோனா தடுப்பூசி தொடர்பில் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரத்தானியாவில் இந்திய கொரோனா மாறுபாடு பரவி வருவது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 21ம் அன்று முதல் பிரித்தானியாவில் அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்த திட்மிடப்பட்டுள்ள நிலையில் இந்திய மாறுாபடு அதற்கு தடையாக உருவெடுக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதேசமயம் இந்திய கொரோனா மாறுபாடுக்கு எதிராக தடுப்பூசிகள் பலன் அளிக்குமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசிகள் இந்திய மாறுபாடு உட்பட அனைத்து விதமான மாறுபாடுகளுக்கு எதிராக செயல்படுவதாகவும், இதன் மூலம் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
கொரோனா மாறுபாடுகளுக்கு எதிராக தடுப்பூசிகள் செயல்பாடு குறித்து புதன்கிழமை புதிய தரவு மதிப்பாய்வு செய்யப்பட்டதாக போரிஸ் ஜான்சன் கூறினார்.