பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட உள்ள வெளிநாடுகள் குறித்த முக்கிய தகவல் கசிந்தது
பிரித்தானியாவின் பயண பட்டியல் எதிர்வரும் வியாழக்கிழமை வெளியாகவுள்ள நிலையில் சிவப்பு பட்டியலில் அதிகமான நாடுகள் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பச்சை, அம்பர் மற்றும் சிவப்பு என பட்டியலிடப்பட்ட நாடுகளின் பட்டியலை வியாழக்கிழமை பிரித்தானியா அரசாங்கம் வெளியிடவுள்ளது.
அதிக நோய்த்தொற்கு விகிதங்கள் மற்றும் கொரோனா மாறுபாடுகளின் பரவல் குறித்த அச்சங்களுக்கு மத்தியில் அதிகமான நாடுகள் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட உள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும், சிவப்பு பட்டியலில் சேர்க்கப்படவுள்ள சாத்தியமான நான்கு நாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
Robert Boyle-ன் பகுப்பாய்வின் படி, அவை பஹ்ரைன், கோஸ்டா ரிக்கா, டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் குவைத் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பட்டியலில் உள்ள நாடுகளை Robert Boyle சரியாக கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.