சார்லஸ் - வில்லியம் இருவரின் பின்னணி அலசினால்... குடும்பம் என்னை மன்னிக்காது: ஹரி வெளிப்படை
மன்னர் சார்லஸ் மற்றும் சகோதரர் வில்லியம் தொடர்பில் வெளிப்படையாக பேச நேரிடும் என இளவரசர் ஹரி மிரட்டல் விடுத்துள்ளார்.
குடும்பம் தம்மை மன்னிக்காது
இளவரசர் ஹரி வெளியிட்டுள்ள தமது நினைவுக்குறிப்புகள் நூலானது விற்பனையில் சாதனை படைத்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. தமது நூலை பிரபலப்படுத்தும் நோக்கில் ஹரி பத்திரிகை மற்றும் ஊடகங்கலுக்கு நேர்முக உரையாடலும் அளித்து வருகிறார்.
@PA
இந்த நிலையில், அவ்வாறான ஒரு நேர் காணலில், மன்னர் சார்லஸ் மற்றும் வில்லியம் ஆகியோர் தொடர்பில் ஏராளமான பின்னணித் தகவல்கள் தமக்கு தெரியும் எனவும், இரண்டாவது நூலுக்கு அது போதும் எனவும், ஆனால் அவ்வாறு நிகழ்ந்தால் குடும்பம் தம்மை மன்னிக்காது என ஹரி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ராஜகுடும்பத்தை காப்பாற்றவே தமது அனைத்து முயற்சிகளும் இருக்கும் எனவும் ஹரி குறிப்பிட்டுள்ளார். தமக்கும் தந்தை சார்லஸுக்கும் சகோதரர் வில்லியத்துக்கும் இடையே நடந்த சில சம்பவங்களை தாம் மனதுக்குள் பூட்டி வைத்துள்ளதாகவும், உலகறிய அதை வெளிப்படுத்த விரும்பவில்லை எனவும் ஹரி தெரிவித்துள்ளார்.
@getty
முட்டுக்கட்டையாக வில்லியம்
சகோதரர் வில்லியத்தின் பிள்ளைகளுக்காக ராஜகுடும்பத்து கட்டமைபை சீர்திருத்த தாம் விரும்பியதாகவும், ஆனால் தமது சகோதரர் வில்லியம் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தார் எனவும் ஹரி குறிப்பிட்டுள்ளார்.
தமது நூலுக்காக தாம் பதிவு செய்த தகவல்கள் பலவற்றையும் தமது எழுத்தாளர் சுருக்கி விட்டதாகவும், இருப்பினும் சொல்லப்படாத பல தகவல்கள் இன்னும் மீதமிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
@AFP
மொத்தமாக தாம் பதிவு செய்த தகவல்களை தொகுத்த போது 800 பக்கங்கள் கொண்ட புத்தகமாக இருந்தது எனவும், ஆனால் பல தகவல்களை நீக்கிவிட்டு மொத்த பக்கத்தை 400 என குறைத்துக் கொண்டதாக ஹரி தெரிவித்துள்ளார்.