விமான சேவைகள் மேலும் தாமதமாகலாம்... பிரித்தானியாவின் முதன்மையான விமான நிலையங்கள் எச்சரிக்கை
பிரித்தானியா முழுவதும் கடும் பனிமூட்டம் காணப்படுவதால், விமானங்கள் மேலும் தாமதமாகலாம் என பிரித்தானியாவின் முதன்மையான விமான நிலையங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இருளடைந்தும் காணப்படும்
அத்துடன் பயணிகள் தங்கள் பயண நேரத்தையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என கோரியுள்ளனர். இன்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பெரும்பகுதியில் மேகமூட்டமாகவும் இருளடைந்தும் காணப்படும் என்றும் மூடுபனி மற்றும் தூறலுக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
20,000 க்கும் மேற்பட்ட மக்கள் கடும் மூடுபனி காரணமாக நேற்று ஒரே நாளில் விமானங்கள் தாமதமாவதை எதிர்கொண்டனர். அதே நிலை இன்றும் நீடிக்கலாம் என்றே முதன்மையான விமான நிலையங்கள் எச்சரித்துள்ளன.
இது குறித்து கேட்விக் விமான நிலைய நிர்வாகிகள் தெரிவிக்கையில், பனிமூட்டம் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் தற்காலிக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சில விமானங்கள் நாள் முழுவதும் தாமதமாகலாம் என்றும் சிரமத்திற்கு லண்டன் கேட்விக் விமான நிலைய நிர்வாகிகள் மன்னிப்பு கோருவதாக குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், மேலும் தகவலுக்கு பயணிகள் தங்கள் விமான நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
குளிராக இருக்கும்
Teesside விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய Ryanair விமானம் நேற்று 300 மைல்களுக்கு அப்பால் டப்ளினுக்கு திருப்பி விடப்பட்டது. இதற்கிடையில், பிரித்தானியாவின் இரண்டு பரபரப்பான ரயில் நிலையங்கள் மொத்தம் ஒன்பது நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
லண்டன் லிவர்பூல் ஸ்ட்ரீட் நிலையம் பொறியியல் பணிகளுக்காக ஜனவரி 2 வரை மூடப்பட்டுள்ளது. மத்திய லண்டனின் மறுபுறத்தில் உள்ள பேடிங்டன் நிலையமும் நாளை வரை மூடப்பட்டுள்ளது.
புத்தாண்டுக்கு முந்தைய நாளும் மழை மற்றும் கடும் பனிக்கு வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. பெரும்பாலான பிரித்தானியர்களுக்கு புத்தாண்டின் முதல் வாரம் கிறிஸ்துமஸை விட குளிராக இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் மழை எச்சரிக்கை டிசம்பர் 30ம் திகதி திங்கள் முழுவதும் அமுலில் இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |