வெளிநாட்டில் கல்வி கற்றவர்களை வரவேற்கும் ஜேர்மனி: ஆனால்...
More foreign qualifications are being recognized in Germany, but growth appears to be slowing: ஜேர்மனி அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டில் கல்வி கற்றவர்களை வரவேற்கிறது.
என்றாலும், அவர்களுடைய எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தாற்போல் தெரியவில்லை!
வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வோர் அங்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஒன்று, அவர்கள் வேலைக்குச் சென்ற அந்த நாடு, இவர்கள் தங்கள் நாட்டில் படித்து பெற்ற பட்டத்தை அங்கீகரிப்பதில்லை.

அதனால், பலர் தாங்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல், குறைந்த வேலைகளையே பார்க்கும் நிலை சில நாடுகளில் உள்ளது.
இந்நிலையில், ஜேர்மனி, பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டில் கல்வி கற்றவர்களை வரவேற்றுவருகிறது.
வெளிநாட்டில் கல்வி கற்றவர்களுக்கு வரவேற்பு
2025ஆம் ஆண்டில், வெளிநாட்டில் கல்வி கற்ற 86,600 பேரின் பட்டங்களை அங்கீகரித்து, அவர்களுடைய விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டுள்ளது ஜேர்மனி.
இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 10 சதவிகிதம் அதிகம் என்கிறது ஜேர்மன் ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம்.
விடயம் என்னவென்றால், இப்படி வெளிநாட்டவர்களின் கல்வித்தகுதியை ஜேர்மன் அங்கீகரித்தாலும், ஜேர்மனியில் குறிப்பிட்ட துறைகளில் வேலை செய்யும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கமாட்டேன்கிறது.
அதற்குக் காரணம் என்னவென்றால், வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு உலக நாடுகள் பலவற்றில் தேவை நிலவுகிறது.
அப்படிப்பட்ட சூழலில், ஜேர்மனியிலோ இன்னமும் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வெறுப்பு நிலவிவருவதை தெளிவாக உணர முடிகிறது.
ஆக, மருத்துவம் முதலான துறைகளில் பணியாளர்களுக்குத் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையிலும், புலம்பெயர்ந்தோருக்கு எதிராக காணப்படும் வெறுப்பு, வேலை பெறுவதில் பெரும் பிரச்சினைகளாக உள்ள நீண்ட நடைமுறைகள் ஆகிய விடயங்களைப் பார்க்கும்போது, இங்கு வேலை செய்வதை விட, தங்களுக்கு வரவேற்பு உள்ள வேறொரு நாட்டுக்கு வேலைக்குப் போய்விடலாமே என வெளிநாட்டுப் பணியாளர்கள் முடிவு செய்துவிடுகிறார்கள்.
ஆகவே, ஜேர்மனி வெளிநாட்டுப் பட்டங்களை அங்கீகரித்தாலும், வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்களுக்கு சாதகமான சூழல் காணப்படும் நாடுகளுக்குச் சென்றுவிடுவதால், ஜேர்மனியில் வெளிநாட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கமாட்டேன்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |