பிரித்தானியாவில் தனது ஆதரவாளர்களிடையிலேயே ஆதரவை இழந்துவரும் ஆளுங்கட்சி
பிரித்தானியாவை ஆளும், லேபர் கட்சி, தனது ஆதரவாளர்களிடையிலேயே ஆதரவை இழந்துவருவது சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
ஆதரவை இழந்துவரும் ஆளுங்கட்சி
பிரித்தானியாவை ஆளும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கும், அவரது தலைமையிலான லேபர் கட்சிக்கும், மக்கள் ஆதரவு குறைந்துவருகிறது.

More in Common என்னும் ஆய்வமைப்பு மேற்கொண்ட ஆய்வொன்றில், 2024ஆம் ஆண்டு லேபர் கட்சிக்கு வாக்களித்தவர்களில் பலர், தற்போது வேறு கட்சிகளுக்கு ஆதரவளிக்கத் துவங்கிவிட்டது தெரியவந்துள்ளது.
Where is Labour’s vote going? Labour are holding half their 2024 vote & losing support roughly equally left and right. 11% to Reform 8% to the Lib Dem’s, 8% to the Greens, 6% to the Tories and 1% to PC/SNP. However 11% don’t know (and tend to be more disillusioned left leaning) pic.twitter.com/7I5595wTiB
— Luke Tryl (@LukeTryl) January 8, 2026
லேபர் கட்சி ஆதரவாளர்களில் 54 சதவிகிதம் வாக்காளர்கள் மட்டுமே லேபர் கட்சிக்கு ஆதரவு என தெரிவித்துள்ள நிலையில், 11 சதவிகிதம் லேபர் வாக்காளர்கள் இனி நைஜல் ஃபராஜ் கட்சிக்கு வாக்களிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்கள்.
8 சதவிகித வாக்காளர்கள், லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சிக்கும், 8 சதவிகித வாக்காளர்கள் கிரீன்ஸ் கட்சிக்கும் வாக்களிக்க இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், 11 சதவிகித வாக்காளர்கள் அடுத்த தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்றே தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்கள்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனது, வரி விதிப்புகள், மக்களுக்கு அளிக்கப்பட்டுவந்த சலுகைகள் குறைப்பு, கொள்கைகளை மாற்றிக்கொண்டே இருப்பது முதலான விடயங்களே, லேபர் கட்சி தனது ஆதரவை இழந்து வருவதற்குக் காரணம் ஆக அமைந்துள்ளது.
ஆக, அடுத்த தேர்தல், லேபர் கட்சிக்கும், பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கும் பெரும் சவாலாக அமையப்போகிறது என்பதில் சந்தேகமேயில்லை எனலாம்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |