இங்கிலாந்தில் நெருக்கடி நிலை அறிவித்துவரும் மருத்துவமனைகள்
More NHS hospitals have declared a 'critical incident': இங்கிலாந்திலுள்ள பல மருத்துவமனைகள் நெருக்கடி நிலை அறிவித்துவருகின்றன.
அதிகரித்து வரும் ப்ளூ மற்றும் கோவிட் தொற்று காரணமாக, இங்கிலாந்திலுள்ள பல NHS அறக்கட்டளை மருத்துவமனைகள் நெருக்கடி நிலை அறிவித்துவருகின்றன.
நெருக்கடி நிலை அறிவிப்பு
கிங்ஸ் மில் மருத்துவமனை, நெவார்க் மருத்துவமனை மற்றும் மான்ஸ்ஃபீல்ட் ஆகிய மருத்துவமனைகளை நிர்வகிக்கும் SFH NHS அமைப்பு, ப்ளூ மற்றும் கோவிட் தொற்று காரணமாக மருத்துவமனைகள் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டுவருவதாகவும், ஆகவே மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தாமதங்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் தெரிவித்துள்ளது.

அதேபோல பல மருத்துவமனைகள், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தாமதங்களை எதிர்கொள்ள நேரிடலாம் என தெரிவித்துவருகின்றன.
ஆகவே, மக்கள், உயிருக்கு ஆபத்தான அவசர விடயங்களுக்காக மட்டுமே அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்குச் செல்லுமாறும், மற்றவர்கள் ஒன்லைனில் NHS 111ஐ பயன்படுத்தவோ அல்லது 111ஐ அழைக்கவோ, அல்லது தங்கள் பொது மருத்துவரையோ, உள்ளூர் மருந்தகங்களையோ நாடவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.