எலான் மஸ்க்கை விட அதிக சம்பளம் வாங்கும் ஒரு தலைமை நிர்வாக அதிகாரி... அந்த நிறுவனம்
பொதுவாக உலகின் மிகப் பெரிய பணக்காரர்களைப் பற்றி மக்கள் பேசும்போது, எலான் மஸ்க், பில் கேட்ஸ் மற்றும் ஜெஃப் பெசோஸ் போன்ற பெயர்களை வழக்கமாக குறிப்பிடுவோம்.
பிளாக்ராக் நிறுவனத்தின்
ஆனால், இந்த வருடம் அவர்களை விட அதிகமாக சம்பாதித்த ஒருவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் பிளாக்ராக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான லாரி ஃபிங்க்.
பிளாக்ராக் உலகின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமாகும், இது டிரில்லியன் கணக்கான டொலர் முதலீடுகளைக் கையாளுகிறது. 1988ல் நிறுவப்பட்ட BlackRock நிறுவனத்தின் குறிக்கோள், எதிர்காலம் கருதி தங்கள் பணத்தை வளர்க்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதாகும்.
2024ல், BlackRock நிறுவனம் சாதனை லாபத்தைப் பதிவு செய்தது, மேலும் இந்த வெற்றி ஃபிங்கின் ஊதியத்தில் பிரதிபலித்தது. கடந்த ஆண்டு, லாரி ஃபிங்க் 36.7 மில்லியன் (ரூ. 227 கோடிக்கு மேல்) டொலர் தொகையை சம்பாதித்தார், இது அவரது முந்தைய ஆண்டு வருமானமான 26.9 மில்லியன் டொலரை விட 33% அதிகமாகும்.
ஃபார்ச்சூன் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், அவரது அடிப்படை சம்பளம் 1.5 மில்லியன் டொலராக (சுமார் ரூ.12.7 கோடி) நிலையாக உள்ளது. ஆனால் அவரது ரொக்க போனஸ் 7.9 மில்லியன் டொலரில் இருந்து 10.6 மில்லியன் டொலராக உயர்ந்தது,
மேலும் அவரது பங்குகளின் மதிப்பு 16.4 மில்லியன் டொலரில் இருந்து 24.6 மில்லியன் டொலராக உயர்ந்தது. 2024ல் வெளியான தரவுகளின் அடிப்படையில் எலான் மஸ்கின் அடிப்படை ஊதியம் என்பது 2 மில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது.
உலகில் அதிக சம்பளம்
ஆனால் டெஸ்லா பங்குகளின் விலையை அடிப்படையாககொண்டு எலான் மஸ்கின் ஊதியம் வேறுபடும். தற்போது லாரி ஃபிங்கின் ஊதிய அதிகரிப்பை விளக்கிய பிளாக்ராக், நாங்கள் எப்போதும் செயல்திறன் அடிப்படையிலான ஊதியத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம்,
மேலும் அதன் பங்குதாரர்களின் கருத்துக்களைக் கேட்பதில் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறோம் என்றும் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஊதிய உயர்வு விவகாரத்தில் பிளாக்ராக் ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இல்லை என்றே கூறப்படுகிறது.
ஃபார்ச்சூன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஆண்டு பிளாக்ராக்கின் நிர்வாக ஊதியத் திட்டத்தை 59 சதவீத பங்குதாரர்கள் மட்டுமே அங்கீகரித்தனர் - இது கடந்த பத்து ஆண்டுகளில் 93 சதவீத சராசரியை விட மிகக் குறைவு.
ஊதிய உயர்வு தொடர்பான விவாதங்கள் இருந்தபோதிலும், லாரி ஃபிங்கின் வருவாய் அவரை இன்று உலகில் அதிக சம்பளம் வாங்கும் வணிகத் தலைவர்களில் ஒருவராக ஆக்கியுள்ளது.
BlackRock நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு தோராயமாக 144.05 பில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது. கடந்த 1999ல் BlackRock நிறுவனத்தின் சந்தை மதிப்பு 904.10 மில்லியன் டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |