பிரித்தானியர்களுக்கு மேலும் கடுமையான கட்டுப்பாடுகள்: பிரான்ஸ் அறிவித்தது
பிரான்சுக்கு வரும் பிரித்தானியர்களுக்கு மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை பிரான்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி, பிரித்தானியா செல்லும் பிரான்ஸ் நாட்டவர்கள், குறைந்தது தங்களை ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும், கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என்பதைக் காட்டும் சான்றிதழை சமர்ப்பிக்கவேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
புதனன்று நடந்த கேபினட் கூட்டத்தைத் தொடர்ந்து பிரான்ஸ் அரசு செய்தித்தொடர்பாளரான Gabriel Attal இந்த தகவலை வெளியிட்டுள்ளார். பிரான்ஸ் தனது ஆம்பர் பட்டியலில் பிரித்தானியாவை சேர்ந்துள்ளது.
அதன் பொருள் என்னவென்றால், அந்த ஆம்பர் பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து பிரான்ஸ் வருவோர் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும், அவர்களை பொலிசார் கண்காணிப்பார்கள், விதிகளை மீறுவோருக்கு 1,000 முதல் 1,500 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.
இந்த விதிகள், வரும் திங்கட்கிழமையிலிருந்து அமுலுக்கு வரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
அவற்றின்படி, பிரான்ஸ் வருவோர், பிரான்சில் கால்வைப்பதற்கு 36 மணி நேரம்
முன்பு எடுக்கப்பட்ட பி சி ஆர் முறையில் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில்,
அல்லது 24 மணி நேரத்திற்குள் செய்யப்பட்ட ஆன்டிஜன் பரிசோதனையில், தங்களுக்கு
கொரோனா இல்லை என்பதைக் காட்டும் சான்றிதழை சமர்ப்பிக்கவேண்டும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.