அமெரிக்காவை விட சீனாவுக்கு அதிக அளவில் பயணிக்கும் சுவிஸ் நாட்டவர்கள்
More passengers are flying to and from China than to and from the United States: சுவிஸ் நாட்டவர்கள், அமெரிக்காவை விட சீனாவுக்கு அதிக அளவில் பயணம் செய்வது தெரியவந்துள்ளது.
ஜெனீவா விமான நிலைய வரலாற்றிலேயே, முதன்முறையாக, சுவிஸ் நாட்டவர்கள், அமெரிக்காவை விட சீனாவுக்கு அதிக அளவில் பயணம் மேற்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவை விட சீனாவுக்கு அதிகம் பேர் பயணம்
ஜூலை மாதம், 25,900 சுவிஸ் நாட்டவர்கள், சீனாவுக்கும், சீனாவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கும் பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.

அந்த காலகட்டத்தில் அமெரிக்காவுக்கும் அமெரிக்காவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கும் பயணித்த சுவிஸ் நாட்டவர்கள் எண்ணிக்கை 23,100 ஆகத்து மாதத்திலோ, 29,300 சுவிஸ் நாட்டவர்கள், சீனாவுக்கும், சீனாவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கும் பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.
அந்த காலகட்டத்தில் அமெரிக்காவுக்கும் அமெரிக்காவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கும் பயணித்த சுவிஸ் நாட்டவர்கள் எண்ணிக்கை 25,300.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட சுவிஸ் நாட்டவர்கள் எண்ணிக்கை, சீனப்பயணம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கையை விட இரட்டிப்பாக இருந்ததாக ஜெனீவா விமான நிலைய செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.