பிரான்ஸ் தலைநகரில் 100-க்கு மேற்பட்டோருக்கு விதிக்கப்பட்ட அபராதம்! பொலிஸ் அதிரடி நடவடிக்கை
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஹோட்டல் ஒன்றில் சட்டவிரோதமாக உணவருந்திக் கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கட்டுப்பாட்டு விதிமுறைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறினால், கடும் அபராதமோ அல்லது கைதோ செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தலைநகர் பாரிஸின் 19 ஆம் வட்டாரத்தின் boulevard de la Villette பகுதிக்கு அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 11 மணிக்கு உள்ளிருப்பு கட்டுப்பாட்டுக்களை மீறி உணவகம் இரகசியமாக திறக்கப்பட்டு, உள்ளே நூற்றுக்கக்கானவர்கள் உணவருந்திக்கொண்டிருந்துள்ளனர்.
இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, உடனடியாக குறித்த பகுதிக்கு விரைந்த வந்த பொலிசார், 103 பேருக்கு அபராதம் விதித்தது.
அதைத் தொடர்ந்து ஹோட்டல் உரிமையாளர் சட்டவிரோதமாக ஹோட்டல் திறந்ததன் காரணமாக கைதும் செய்யப்பட்டார்.