விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவில் நீண்ட நேரம் காத்திருப்பதால் மரணமடையும் 1,000 நோயாளிகள்
பிரித்தானிய மருத்துவமனைகளின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவில் நீண்ட நேரம் காத்திருக்க நேர்வதால், மாதம் ஒன்றிற்கு சுமார் 1,000 நோயாளிகள் மரணமடைவதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது.
நீண்ட நேரம் காத்திருப்பதால்...
இங்கிலாந்திலுள்ள பிரித்தானிய மருத்துவமனைகளின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவுகளில் நீண்ட நேரம் காத்திருக்க நேர்வதால், தேவையில்லாமல் மாதம் ஒன்றிற்கு 1,300க்கும் அதிகமான நோயாளிகள் மரணமடைவதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது.

2025ஆம் ஆண்டு நிலவரப்படி, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவுகளில் நீண்ட நேரம் காத்திருப்பதால், வாரம் ஒன்றிற்கு 300 நோயாளிகள் வரை மரணமடைவதாக Royal College of Emergency Medicine என்னும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வொன்று தெரிவிக்கிறது.
இந்த தேவையற்ற மரணங்களைத் தவிர்க்க, அரசு தக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என மருத்துவத்துறையின் பல்வேறு பிரிவினரும் கோரிக்கை விடுத்துவருகிறார்கள்.
அவசர சிகிச்சைப்பிரிவுகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நிதி ஒதுக்குதல், செவிலியர்கள் எண்ணிக்கையை அதிகரித்தல், ஆரம்ப சிகிச்சை சேவையை அணுகுவதை எளிதாக்குதல் என பல்வேறு நடவடிக்கைகள் மூலமே இந்த பிரச்சினைக்கு முடிவைக் கொண்டுவரமுடியும் என்கிறார்கள் துறைசார் நிபுணர்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |