பிரித்தானியா மருத்துவமனைகளில் 11,000 பேர் பலி! அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்ததில் 11 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதாக, புதிய புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பும் அடுத்த ஆண்டு ஆரம்ப கட்ட மாதங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், இல்லையென்றால் கொரோனா பரவல் மீண்டும் ஐரோப்பாவில் அதிகரிக்கலாம் என்று எச்சரித்துள்ளது.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதிய புள்ளி விவரங்களின் படி தகவல் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்டுள்ளதாக பிரபல ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
அதில், மருத்துவமனைகளில் பிற பாதிப்புகளாலும், கொரோனாவாலும் அனுமதிக்கப்பட்டவர்கள் சோதனை செய்ததில், பிற பாதிப்பால் வந்தவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.
இதன் மூலம் மருத்துவமனைகளில் கொரோனாவால் 11,000 பேர் உயிரிழந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த புள்ளி விவரம் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்த போது மொத்த இறப்புகளில் 8-ல் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளது.
இதில் University Hospitals Birmingham-ல் அதிகபட்சமாக 484 பேர் உயிரிழந்துள்ளனர். இது பிரித்தானியாவில் மிகப்பெரிய மருத்துவமனை அறக்கட்டளைகளில் ஒன்று ஆகும்.
இங்கு18,000-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது மற்ற அறக்கட்டளை மூலம் இயங்கும் மருத்துவமனைகளை விட அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால், இந்த கொரோனா வைரஸை அமைதியாக கொல்லும் மிகக் கொடிய கொலையாளி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் வசந்த காலத்தில் சுகாதார ஊழியர்கள் அனைவரும் இரண்டு தடுப்பூசி போட்டப்பட்டிருக்க வேண்டும், அப்படி இல்லையென்றால், தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஊழியர்கள் வேலையை விட்டு நீக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.