அமெரிக்காவை தாக்கிய சூறாவளி! 20 லட்சம் மக்கள் பாதிப்பு..உயிரிழப்புகள் இருக்கக்கூடும் என தகவல்
அமெரிக்க மாகாணம் புளோரிடாவை மில்டன் புயல் தாக்கியதில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருளில் மூழ்கினர்.
கரையை கடந்த புயல்
புளோரிடாவின் சீஸ்டா கீ பகுதி அருகே மில்டன் சூறாவளி புயல் கரையை கடந்தது. இதனால் மணிக்கு 195 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.
நேற்றிரவு சூறாவளி தாக்கியதில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருளில் தவித்தனர்.
முன்னதாக, ஹெலன் சூறாவளி தாக்கியதில் 6 மாகாணங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பாரிய பாதிப்பு
இந்நிலையில் சூறாவளியின் தீவிரம் குறைந்தாலும், அதிக ஆபத்தை ஏற்படுத்தும் பிரிவிலேயே மில்டன் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆர்லேண்டோவுக்கு தென்மேற்கே 60 மைல்கள் தொலைவில் சூறாவளி மையம் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டதால், செயின்ட் லூசி கவுண்டி பகுதியில் சிலர் உயிரிழந்து இருக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் சூறாவளியால் கனமழை பெய்து வருவதால் பாரிய அளவில் பாதிப்பு ஏற்படக்கூடும் மற்றும் மீட்பு பணியிலும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |