20க்கும் மேற்பட்ட மாகாணங்கள் டொனால்ட் ட்ரம்பின் மீது வழக்கு
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய உலகளாவிய வரி விதிப்புக்கு எதிராக சுமார் இரண்டு டசின் மாகாணங்கள் நீதிமன்றங்களை நாடியுள்ளன.
வர்த்தக பற்றாக்குறை
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் ஏற்பட்ட கடுமையான தோல்விக்குப் பிறகு ட்ரம்ப் விதித்த இறக்குமதி வரிகள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

உலகின் பெரும்பகுதி நாடுகள் மீது 15 சதவீத வரி விதிக்க திட்டமிட்டதன் மூலம் ட்ரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுவதாக வழக்கில் உள்ள ஜனநாயகக் கட்சியின் அட்டர்னி ஜெனரல் மற்றும் ஆளுநர்கள் வாதிடுகின்றனர்.
ஆனால், அமெரிக்காவின் நீண்டகால வர்த்தக பற்றாக்குறையைக் குறைக்க வரிகள் அவசியம் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். கடந்த ஆண்டு அவசரகால அதிகாரச் சட்டத்தின் கீழ் விதித்த வரிகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது பிறகு, 1974 ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 122 இன் கீழ் புதிய வரிகளை அறிவித்தார்.
இதுவரை பயன்படுத்தப்படாத பிரிவு 122 இன் கீழ், ஜனாதிபதி 15% வரை வரிகளை விதிக்க அனுமதிக்கிறது. ஆனால், நாடாளுமன்றத்தால் அவை நீட்டிக்கப்படாவிட்டால், அவை ஐந்து மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
இந்த நிலையிலேயே தற்போது ஓரிகான், அரிசோனா, கலிபோர்னியா மற்றும் நியூயார்க்கைச் சேர்ந்த அட்டர்னி ஜெனரல்களால் இந்த வழக்கு நடத்தப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |