பிரித்தானியாவில் டெல்டா மாறுபாட்டால் 250-க்கும் மேற்பட்டோர் மரணம்! வெளியான திடுக்கிடும் தகவல்
பிரித்தானியாவில் டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட 250-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததாக பிரித்தானியா பொது சுகாதாரம் இங்கிலாந்து (PHE) அறிக்கை வெளியிட்டுள்ளது.
பொது சுகாதார இங்கிலாந்து (PHE) வெளியிட்ட அறிக்கையில், ஜூன் 21 ஆம் தேதி நிலவரப்படி, இங்கிலாந்தில் டெல்டா மாறுபாடு இருப்பதை உறுதிசெய்தவர்கள் மற்றும் தொற்று உறுதியாகி 28 நாட்கள் ஆனவர்கள் என மொத்தம் 257 மரணங்கள் ஏற்பட்டுள்ளது.
இவர்களில் 26 பேர் 50 வயதிற்குட்பட்டவர்கள் என்றும், 231 பேர் 50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் என்றும் PHE தரவு காட்டுகிறது.
50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 231 பேரில், 71 பேர் தடுப்பூசி போடவில்லை, ஒருவர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு 21 நாட்களுக்குள் ஆனவர், 41 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு 21 நாட்களுக்கு மேல் ஆனவர்கள், 116 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள்.
50 வயதிற்குட்பட்ட 26 பேரில், மூன்று பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு 21 நாட்களுக்கு மேல் ஆனவர்கள், இருவர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள், 21 பேர் தடுப்பூசி போடாதவர்கள்.
ஜூன் 21 ஆம் தேதி நிலவரப்படி டெல்டா மாறுபாடு பாதிப்புடன் இங்கிலாந்தில் மொத்தம் 1,904 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில், 50 வயதுக்குட்பட்டோர் 1,283 பேர், 50 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் 615 பேர்.
50 வயதிற்குட்பட்டவர்களில், 987 (77%) பேர் தடுப்பூசி போடவில்லை, 106 (8%) பேர் முதல் தடுப்பூசி செலுத்தி 21 நாட்களுக்குள் ஆனவர்கள், 118 (9%) பேர் முதல் டோஸ் போட்டு 21 நாட்களுக்கு மேல் ஆனவர்கள் மற்றும் 48 (4%) இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள்.
50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதிற்குட்பட்டவர்களில், 195 (32%) பேர் தடுப்பூசி போடவில்லை, 11 (2%) பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு 21 நாட்களுக்குள் ஆனவர்கள், 140 (23%) பேர் முதல் டோஸ் போட்டு 21 நாட்களுக்கு மேல் ஆனவர்கள் மற்றும் 265 (43%) பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் என PHE தரவு காட்டுகிறது.