59,000 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கிய அமெரிக்கா; பட்டியலில் இரண்டாவது இடம்
அமெரிக்க குடியுரிமை பெறும் நபர்களின் பட்டியலில் இந்தியர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
2023-ஆம் ஆண்டில், அதிக எண்ணிக்கையிலான அமெரிக்க குடிமக்களைக் கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா ஆனது.
வீட்டு மாடியிலேயே Take-Off, Landing பண்ணலாம்., எலக்ட்ரிக் ஏர் காப்டர்களை அறிமுகப்படுத்தும் Maruti Suzuki
கடந்த ஆண்டு, அமெரிக்கா 8,78,500 பேருக்கு புதிய குடியுரிமை வழங்கியது.
அவர்களில், 59,100 இந்தியர்கள் உள்ளனர் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) சமீபத்திய ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களில் 6.7 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
1.1 லட்சம் குடியுரிமைகளுடன் Mexico முதலிடத்தில் உள்ளது.
Philippines மற்றும் Dominican Republic மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன.
ஒரு வெளிநாட்டவர் அமெரிக்க குடியுரிமை பெற குடிவரவு மற்றும் தேசிய சட்டத்தின் கீழ் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
ஒரு நபருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படுவதற்கு முன், அவர் ஐந்து வருடங்கள் நாட்டில் சட்டப்பூர்வ குடியுரிமை பெற்றிருக்க வேண்டும்.
2023-இல் அமெரிக்க குடியுரிமை பெற்ற தேசிய இனங்களின் எண்ணிக்கை மற்றும் சதவீதம்
1- மெக்சிகோ: 1,11,500 பேர் (12.7 சதவீதம்)
2- இந்தியா: 59,000 பேர் (6.7 சதவீதம்)
3- பிலிப்பைன்ஸ்: 44,800 பேர் (5.0 சதவீதம்)
4- டொமினிகன் குடியரசு: 35,200 பேர் (4.0 சதவீதம்)
5- கியூபா: 33,200 பேர் (3.8 சதவீதம்)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |