அதிக Credit Cards வைத்திருக்கிறீர்களா? கட்டாயம் இதை தெரிந்துகொள்ளுங்கள்
ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பதன் மூலம் அவரது கடன் வாங்கும் தகுதி உயரும்.
அதிக Credit Card-களை வைத்திருப்பதன் மூலம் Reward மற்றும் Cashback points உள்ளிட்ட பயன்களை நாம் அனுபவிக்கலாம்.
ஆனாலும், ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுகளை வைத்திருப்பதன் மூலம் சில சிக்கல்களையும் எதிர்கொள்ளும் நிலை உள்ளது.
கூடுதல் கிரெடிட் கார்டுகளின் பயன்கள்
நாம் கூடுதலாக கார்டு வைத்திருப்பது அவசர மருத்துவ தேவைக்கு பயன்படும்.
ஒரு கிரெடிட் கார்டை தொலைத்துவிட்டாலோ அல்லது தொழில்நுட்ப காரணங்களால் பயன்படுத்த முடியாமல் போகும்போது, கூடுதல் கார்டு உதவியாக இருக்கும்.
ஆனாலும் தேவைப்பட்டால் மட்டுமே கூடுதல் கார்டை பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
டி.வி, மொபைல் போன் போன்ற பொருட்களை கூடுதல் கிரெடிட் கார்டுகளை வைத்திருக்கிறோம் என்பதால் வாங்க வேண்டாம்.
அதிக செலவு செய்ய வேண்டும் எனும் எண்ணம் இருக்கும் என்பதால், கடன் என்னும் பொறியில் சிக்க வேண்டி இருக்கும். எனவே கிரெடிட் கார்டு மூலம் செலவுகளை கட்டுப்படுத்தும் வழிகளை அறிந்துகொள்ளுங்கள்.
செயலிகள்
இதற்காக பிரத்தியேக செயலிகள் உள்ளன. அதிக செலவு செய்யும்போது இந்த செயலி உங்களுக்கு எச்சரிக்கைகளை அனுப்பும்.
அடுத்து Netbanking உள்ளிட்ட இதர வழிகளில் பணத்தை செலுத்தலாம். பல வகையான கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் பட்சத்தில், பல சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
அதாவது Bonus புள்ளிகள், Cashback தவிர சினிமா டிக்கெட் உள்ளிட்ட சிறப்பு சலுகைகளும் உள்ளன.
சிக்கல்கள்
மூன்றுக்கும் மேற்பட்ட கார்டுகளை வைத்திருப்பது சிக்கல் தான். அத்துடன் அனைத்து கார்டுகளையும் கையாளுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
அதாவது, நீங்கள் பயன்படுத்தும் அனைத்து கார்டுகளின் வங்கிகளும் உங்களுடைய பில் செலுத்தும் திகதியை நினைவுபடுத்தும் என்று கூற முடியாது.
ஒருவேளை நினைவுபடுத்தினாலும், நீங்கள் பணம் செலுத்திவிட்டோம் என நினைக்க வாய்ப்பு உள்ளது.
அதேபோல், நீங்கள் சரியான நேரத்தில் பணத்தை செலுத்தவில்லை என்றால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய இதர சலுகைகளை விட அபாரதம் அதிகமாக இருக்கும். எனவே கவனமாக கையாள வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |