ஆன்டி பர்னாம் அமைச்சரவையில் பெண்களுக்கு அதிக இடம்: ஆண்களைவிட...
பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஆன்டி பர்னாம், தனது அமைச்சரவையில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக இடம் கொடுத்துள்ளார்.
ஆண்களை விட பெண்களுக்கு அதிக இடம்

ஆம், ஆன்டி பர்னாம் அமைச்சரவையில் 11 ஆண் அமைச்சர்கள், 12 பெண் அமைச்சர்கள்!

அவர்களில், உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத், வீட்டுவசதித்துறை அமைச்சரான ஏஞ்சலா ரெய்னர், முதல் மாநிலச் செயலரான லூயிஸ் ஹைக் மற்றும் கல்விச் செயலரான லூசி பவல் ஆகியோர் அடங்குவர்.

லூயிஸுக்கு வழங்கப்பட்டுள்ள முதல் மாநிலச் செயலர் பதவி என்பது, துணைப் பிரதமர் பதவிக்கு இணையான பதவியாகும்.

மேலும், யெவட் கூப்பருக்கு சுகாதாரச் செயலர் பதவியும், பிரிட்ஜட் பிலிப்சனுக்கு பெண்கள் மற்றும் சமத்துவ அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஆன்டி பர்னாம் நாடாளுமன்ற உறுப்பினராவதில் முக்கிய பங்காற்றிய ஆனலீஸ் மிட்க்லீக்கு chief whip என்னும் பொறுப்பும், இந்திய வம்சாவளியினரான லிசா நந்திக்கு கலாச்சாரச் செயலர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

முந்தைய பிரதமரான கெய்ர் ஸ்டார்மரின் முதல் அமைச்சரவையிலும் பெண்களுக்கு அதிக இடம் வழங்கப்பட்டிருந்தது. அவரது அமைச்சர்களில் 11 பேர் பெண்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |