வாணவேடிக்கை காட்டிய இயான் மோர்கன்: அவுஸ்திரேலியா மாஸ்டர்ஸ் தரமான பதிலடி (வீடியோ)
ராய்பூரில் நடந்த இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், அவுஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இயான் மோர்கன் ருத்ர தாண்டவம்
இங்கிலாந்து மாஸ்டர்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணிகள் மோதிய போட்டி நேற்று நடந்தது.
முதலில்ஆடிய இங்கிலாந்து அணியில் மஸ்டர்ட் 17 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இயான் மோர்கன் மற்றும் ஆம்ப்ரோஸ் ருத்ர தாண்டவம் ஆடினர்.
சிக்ஸர்களை பறக்கவிட்ட அணித்தலைவர் இயான் மோர்கன் (Eoin Morgan) 32 பந்துகளில் 5 சிக்ஸர்ஸ், 5 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் விளாசினார்.
𝐒𝐭𝐞𝐚𝐝𝐲. 𝐒𝐭𝐫𝐨𝐧𝐠. 𝐔𝐧𝐬𝐭𝐨𝐩𝐩𝐚𝐛𝐥𝐞! 💪
— INTERNATIONAL MASTERS LEAGUE (@imlt20official) March 12, 2025
Tim Ambrose remains unbeaten, bringing up a 𝐰𝐞𝐥𝐥-𝐞𝐚𝐫𝐧𝐞𝐝 𝐡𝐚𝐥𝐟-𝐜𝐞𝐧𝐭𝐮𝐫𝐲 and keeping the scoreboard ticking! ✅#IMLT20 #TheBaapsOfCricket #IMLonJioHotstar #IMLonCineplex pic.twitter.com/MWVHEbt0AC
கடைசிவரை களத்தில் நின்ற ஆம்ப்ரோஸ் 44 பந்துகளில் 2 சிக்ஸர்ஸ், 7 பவுண்டரிகளுடன் 69 ஓட்டங்கள் குவித்தார்.
𝐌𝐀𝐆𝐍𝐈𝐅𝐈𝐂𝐄𝐍𝐓 𝐌𝐎𝐑𝐆𝐀𝐍 🤩
— INTERNATIONAL MASTERS LEAGUE (@imlt20official) March 12, 2025
A sensational 𝟔𝟒 𝐨𝐟𝐟 𝟑𝟐 from the captain 🫡 what a way to do it! 👏#IMLT20 #TheBaapsOfCricket #IMLonJioHotstar #IMLonCineplex pic.twitter.com/gByG2iHjN7
மேடி 29 (19) ஓட்டங்களும், பிரெஸ்னன் 18 (8) ஓட்டங்களும் விளாச இங்கிலாந்து மாஸ்டர்ஸ் 209 ஓட்டங்கள் குவித்தது.
சிக்ஸர் மழை
பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணியில் ஷான் மார்ஷ் 20 ஓட்டங்களில் வெளியேறினார்.
அடுத்து கைகோர்த்த டேனியல் கிறிஸ்டியன், நாதன் ரியர்டன் கூட்டணி சிக்ஸர் மழை பொழிந்தது. கிறிஸ்டியன் 28 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, நாதன் ரியர்டன் 39 பந்துகளில் 5 சிக்ஸர்ஸ், 9 பவுண்டரிகளுடன் 83 ஓட்டங்கள் விளாசினார்.
𝐎𝐧𝐞 𝐰𝐚𝐬𝐧’𝐭 𝐞𝐧𝐨𝐮𝐠𝐡! 🫣
— INTERNATIONAL MASTERS LEAGUE (@imlt20official) March 12, 2025
𝐑𝐞𝐚𝐫𝐝𝐨𝐧 goes big - two massive sixes in a row! Power-hitting at its finest! 💥#IMLT20 #TheBaapsOfCricket #IMLonJioHotstar #IMLonCineplex pic.twitter.com/M4Vpv830Ik
பீட்டர் நெவில் 28 (18) ஓட்டங்கள் விளாச, அவுஸ்திரேலிய அணி 19.1 ஓவரில் 210 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
நடப்பு சீசனில் கடைசி போட்டியில் விளையாடிய இங்கிலாந்து ஒரு வெற்றி கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
𝗙𝗶𝗳𝗲𝗿 𝗙𝗲𝘃𝗲𝗿: 𝗕𝗿𝗲𝘀𝗻𝗮𝗻'𝘀 𝗨𝗻𝘀𝘁𝗼𝗽𝗽𝗮𝗯𝗹𝗲 𝗦𝗽𝗲𝗹𝗹! 🤩⚡
— INTERNATIONAL MASTERS LEAGUE (@imlt20official) March 12, 2025
Tim Bresnan steals the spotlight, showcasing his mastery with the ball! 👏#IMLT20 #TheBaapsOfCricket #IMLonJioHotstar #IMLonCineplex pic.twitter.com/Ai9vpLsFW1
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |