முடியை அடர்தியாக்க முருங்கை இலை.., எப்படி பயன்படுத்துவது?
பெண்களின் தலைமுடி என்பது எப்பொழுதும் ஒரு தனி அழகுதான்.
ஆனால் முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி மெலிதாகி விடுகின்றன.
அந்தவகையில், முடியின் அடர்த்தியை அதிகரிக்க முருங்கை இலையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முருங்கை இலை- 2 கைப்பிடி
- தண்ணீர்- சிறிதளவு
எப்படி பயன்படுத்துவது?
முதலில் முருங்கை இலையை நன்கு கழுவி உலரவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் இதனை ஒரு வாணலில் சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுத்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து அரைத்த பொடியுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து தலைமுடியில் உச்சந்தலை முதல் முடியின் நுனி வரை நன்கு தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
பின் இதனை 20 நிமிடம் அப்படியே விட்டு பின் மென்மையான ஷாம்பு கொண்டு கூந்தலை அலசலாம்.
இதனை தொடர்ந்து வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |