இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் முருங்கை இலை டீ.., எப்படி தயாரிப்பது?
உணவுக் கட்டுப்பாடும் வாழ்க்கை முறை மாற்றங்களும் தான் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.
இரும்புச்சத்து நிறைந்த முருங்கை இலைகள் சர்க்கரையை நிரந்தரமாகக் கட்டுக்குள் வைப்பதில் பேருதவியாக இருக்கும்.
அந்தவகையில், இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் முருங்கை இலை டீ எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முருங்கை இலை- ½ கைப்பிடி
- தண்ணீர்- 2 கப்
- இஞ்சி - 1 சிறிய துண்டு
- தேன்- 1 ஸ்பூன்
எப்படி தயாரிப்பது?
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அதில் இஞ்சியை துருவி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
கொதித்து வரும் வேலையில் அதில் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கை இலைகளை சேர்த்து கொதிக்க விடவும்.

கொதிக்கின்ற தண்ணீர் பாதி அளவிற்கு சுண்டும் வரை கொதிக்க விடவும்.
பின் இதை வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்து கலந்து குடித்து வர இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |