உலகக் கோப்பை கால்பந்து: காலிறுதிக்கு முன்னேறிய மொராக்கோ: படுதோல்வியடைந்த கனடா
கனடாவை வீழ்த்தி மொராக்கோ அணி 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
மொராக்கோ அபார வெற்றி
சனிக்கிழமை ஹூஸ்டனில் நடந்த 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் கனடா மற்றும் மொராக்கோ அணிகள் மோதின.
இந்த போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய மொராக்கோ அணி தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.
#2026_World_Cup: #Morocco Advances to Quarterfinals With 3-0 Victory Over #Canada#QNAhttps://t.co/wm7Giii7FL pic.twitter.com/FNkkg4wk75
— Qatar News Agency (@QNAEnglish) July 4, 2026
ஆட்டத்தின் 50 வது மற்றும் 82 வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் நட்சத்திர வீரர் அசெடின் ஓனாஹி (Azzedine Ounahi) தலா ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
இதனை தொடர்ந்து போட்டியில் ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரத்தின் 8 வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் சுஃபியான் ரஹிமி கோல் ஒன்றை அடித்து மொராக்கோ அணியின் வெற்றியை 3-0 என உறுதி செய்தார்.
கனடா அணி எவ்வளவு போராடியும் வெற்றிக்கான கோல்களை இறுதி வரை அடிக்க முடியாததால் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

மொராக்கோ காலிறுதிக்கு தகுதி
மொராக்கோ அணியின் இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
பிரான்ஸ் மற்றும் பராகுவே அணிகளுக்கு இடையிலான போட்டியின் வெற்றியாளருடன் காலிறுதிப் போட்டியில் மொராகோ அணி பலப்பரீட்சை செய்யும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |