நாங்கள் வெற்றியாளர்கள்! சிங்கங்களைப் பற்றி பெருமைப்படுகிறோம்..அரையிறுதி தோல்விக்கு பின் கூறிய மொராக்கோ ரசிகர்கள்
உலகக்கோப்பை அரையிறுதியில் மொராக்கோ அணி தோல்வியடைந்தபோது அந்த அணியின் ரசிகர்கள் தங்கள் வீரர்களை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவித்தனர்.
மொராக்கோ தோல்வி
கத்தார் உலகக்கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியிடம் மொராக்கோ தோல்வியடைந்தது. மொராக்கோ அடுத்ததாக 17ஆம் திகதி நடக்கும் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் குரோஷியாவை எதிர்கொள்கிறது.
தோல்வியடைந்தாலும் மொராக்கோ ரசிகர்கள் தங்கள் அணியை விட்டுக் கொடுக்காமல், தங்கள் வீரர்களை நினைத்து பெருமைப்படுவதாக கூறினர்.
@Sorin Furcoi/Al Jazeera
பெருமைப்படும் ரசிகர்கள்
லாமியா என்ற ரசிகை கூறுகையில், 'சிங்கங்களைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். எங்கள் அணி உலகக்கோப்பையின் அரையிறுதிக்கு வரும் என்று எங்களில் யாரும் கனவிலும் நினைத்திருக்க முடியாது. நாங்கள் உண்மையில் மூன்றாவது இடத்தைப் பெற விரும்புகிறோம், அது நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. நாங்கள் நினைத்ததை விட அதிகமாக செய்துவிட்டோம்' என தெரிவித்தார்.
அதேபோல் யூஸ்ரா என்ற ரசிகை, நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுகிறேன், ஆனால் ஏமாற்றம் இல்லை. இதுவரை ஆச்சரியமாக இருந்தது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறோம். அவர்கள் வரலாறு படைத்துள்ளனர். அவர்கள் போராளிகள். எதுவாக இருந்தாலும் நாங்கள் அவர்களை இறுதிவரை ஆதரிக்கிறோம் என தெரிவித்தார்.
@Sorin Furcoi/Al Jazeera
பிரான்சில் பிறந்த மொராக்கோ ரசிகை
பிரான்சில் பிறந்த ஷைமா இது கசப்பான வெற்றி என்று குறிப்பிட்டார். அவர் கூறுகையில், 'எனது பெற்றோர் மொராக்கோவைச் சேர்ந்தவர்கள், எனவே நான் இன்றிரவு மொராக்கோவை ஆதரித்தேன். அவர்கள் ஒரு பெரிய காரியத்தைச் செய்தார்கள். ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு அணி உண்மையிலேயே சிறப்பான ஒன்றை சாதிக்க முடியும் என்பதை அவர்கள் உலகுக்குக் காட்டினார்கள்' என தெரிவித்தார்.
இன்னும் சில ரசிகர்கள், மொராக்கோ கால்பந்து இப்போது முற்றிலும் மாறிவிட்டதாகவும், தாங்கள் வெற்றியாளர்கள் என்றும் கூறினர்.
@Sorin Furcoi/Al Jazeera