ரொனால்டோவை மிரள வைத்த கோல் கீப்பர்! வைரலாகும் வீடியோ
லக்சம்பர்க் அணிக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் நடச்சதிரம் ரொனால்டோ அடித்த சிசர் கிக்கை கோல் கீப்பர் மோரிஸ் லாவகமாக தடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சா்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) சாா்பில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது.
கடந்த 2018ல் பிரான்ஸ் அணி உலக சாம்பியன் பட்டம் வென்றது. அடுத்த உலகக் கோப்பை போட்டி 2022 நவம்பர் 21ம் திகதி கத்தாரில் தொடங்குகிறது.
இதற்காக கண்டங்கள் அளவில் தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
ஐரோப்பிய பிரிவு தகுதிச்சுற்றில் குழுவிற்கு 6 அணிகள் என A,B,C,D,E,F,G,H,I மற்றும் J என 10 குழுக்களாக நடைபெற்று வருகிறது.
இதில், நேற்று ஐரோப்பிய பிரிவு தகுதிச்சுற்றில் குரூப் A-வில் போர்ச்சுகல்-லக்சம்பர்க் அணிகள் மோதின. ஆட்ட நேர முடிவில் 5-0 என லக்சம்பர்க் அணியை வீழ்த்தி போர்ச்சுகல் அசத்தல் வெற்றிப்பெற்றது.
இப்போட்டியில் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். கிளப் மற்றும் தேசிய அணிக்காக அவர் அடித்த 58வது ஹாட்ரிக் கோல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
8வது மற்றும் 13வது நிமிடத்தில் கிடைத்த இரண்டு பெனால்டி வாய்ப்புகளையும் கோலாக மாற்றி ரொனால்டோ, 87 நிமிடத்தில் தலையால் முட்டி கோல் அடித்து அசத்தினார்.
17வது நிமிடத்தில் Bruno Fernandes, 69 நிமிடத்தில் Joao palhinha கோல் அடித்தனர்.
போட்டியின் 67வது நிமிடத்தில் Cancelo பாஸ் செய்த பந்தை ரொனால்டோ சிகர் கிக் அடிக்க லக்சம்பர்க் கோல் கீப்பர் மோரிஸ் லாவகமாக தடுத்து ரொனால்டோவை மிரள வைத்தார்.
Ronaldo almost scored this ? pic.twitter.com/yQSS9kL7bn
— ESPN FC (@ESPNFC) October 12, 2021
குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை தகுதிச்சுற்றில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள போர்ச்சுகல் அணி குரூப் A-வில் 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, செர்பியா 17 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.